நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், விருப்பமுள்ள மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், 30-ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment