குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சேவையின் கீழ் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது.இந்த அலகில் தரவு பகுப்பாளர் data analyst பணியிடம் தற்போது நிரப்பப்பட உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், மாதம் ஊதியமாக 18536 ரூபாய் வழங்கப்படும்
மொத்தமாக ஒரேயொரு காலிப்பணியிடம் உள்ள நிலையில், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. BCA, கணிதவியல், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே கணினி சார்ந்த வேலைகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் 42 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பந்தை www.virudhunagar.nic.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் புகைப்படத்தை இனைத்து அதை கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் ஜுன் 28 2024 மாலை 5.30 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 - வ.உ.சி நகர்,சூலக்கரை மேடு, விருதுநகர் - 626003 , தொலைபேசி எண்:04562-293946
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment