Search

NEET UG Result 2024 : நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு... தெரிந்துகொள்ளுவது எப்படி..?

 NEET UG Result 2024 : இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் நடத்தப்படும் நீட் தேர்வை கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர்.

neet-result-110706806

கடந்த மே 30 ஆம் தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கும் தருணத்தில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

நீட் 2024 முடிவுகள் தெரிந்துகொள்ளுவது எப்படி?

தேசிய தேர்வு முகமையின் https://neet.ntaonline.in/undefined என்ற இணையத்தளத்தில் நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த இணையத்தளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்களை உள்ளிட்டு மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

0 Comments:

Post a Comment