தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக இருந்த அறிவொளி இன்று ஓய்வு பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேபோன்று அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா, தொடக்கக் கல்வி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் லலிதாவுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த அரசாணையை பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இந்த பணி மாறுதல் ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- I ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, இந்த பணியிட மாறுதல் மற்றும் முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment