SSLC - July Supplementary Exam 2024 - Hall Ticket Download And Practical Exam - Press News - Agri Info

Adding Green to your Life

June 19, 2024

SSLC - July Supplementary Exam 2024 - Hall Ticket Download And Practical Exam - Press News

 
நடைபெறவுள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் ( தட்கல் உட்பட ) 24.06.2024 ( திங்கட்கிழமை ) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று " HALL TICKET ” என்ற வாசகத்தினை " Click " செய்த பின்னர் தோன்றும் பக்கத்தில் SSLC - JULY 2024 SUPPLEMENTARY EXAMINATION - HALL TICKET DOWNLOAD " , என்ற வாசகத்தினை " Click " செய்தால் தோன்றும் பக்கத்தில் , தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் . விண்ணப்ப எண் ( APPLICATION NUMBER ) அல்லது நிரந்தரப்பதிவெண் ( PERMANENT REGISTER NO ) மற்றும் பிறந்த தேதியினைப் ( DATE OF BIRTH ) பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 25.06.2024 ( செவ்வாய்க்கிழமை ) முதல் 26.06.2024 ( புதன்கிழமை ) வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வு நடைபெறவுள்ளது . மேலும் , கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்

SSLC - July Supplementary Exam 2024 - Hall Ticket Download And Practical Exam - Press News pdf 👇

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment