டிஎன்பிஎஸ்சி, குரூப்
1 தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்கள், இலவச
பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் . இது
குறித்து, நாமக்கல் மாவட்ட
ஆட்சியர் உமா
செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும்
மையத்தில் செயல்பட்டு
வரும் தன்னார்வ பயிலும்
வட்டத்தின் மூலம்,
பல்வேறு போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் இலவசமாக
நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழக அரசு பணியாளர்
தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி)
நடத்தப்படவுள்தொகுதி குரூப் 1 தேர்விற்கு, 90 காலிப்பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்போட்டித் தேர்விற்கான
இலவச பயிற்சி வகுப்பு,
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள
மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்
படி, நாமக்கல் மாவட்ட வேவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும்
மையத்தில் நேரடியாக,
கடந்த ஏப். 15 முதல், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை
முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 முதல், மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.ஒவ்வொரு பாடவாரியாக
சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள்
மற்றும் மாதிரித்தேர்வுகள்
நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், மாநில அளவிலான
மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட
உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில்
கலந்துக் கொள்ள
விருப்பம் உள்ள
மனுதாரர்கள், தங்களின்
விபரத்தை, 04286 -222260 என்ற தொலைபேசி எண்
மூலமாகவே அல்லதுonlineclassnkl@gmail.comஎன்ற இ-மெயில்
மூலமாகவே அல்லது
நாமக்கல் மாவட்ட
வேலைவாய்ப்பு மையத்தை
நேரில் தொடர்பு கொண்டோ,
தங்களது பெயர்,
முகவரி, தொலைபேசி எண்
அடங்கிய சுயவிவரத்தை
பதிவு செய்து பயன்பெறலாம்.
நமது தன்னார்வ பயிலும்
வட்டத்தில் ஏற்கனவே
பயின்ற மாணவர்கள், 2022- 2023ம் ஆண்டு வெளியான
சீருடைப்பயனாளர் தேர்வாணைய
எஸ்.ஐ. தேர்வில்
5 பேர், போலீஸ் தேர்வில்
17 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில்
உள்ளனர்.
மேலும் 2023-24ம் குரூப் 4 தேர்வில் 22 பேர், குரூப் 2 முதன்மை தேர்வில்
8 பேர், இறுதி கலந்தாய்விற்கு
தேர்வாகி உள்ளனர்.
2023-24 ஆண்டில், எஸ்.ஐ.
தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், போலீஸ் தேர்வில்
45 பேர் உடற்தகுதி தேர்வுக்கு
சென்று முடிவிற்காக காத்திருக்கின்றனர்
என்று ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment