சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் குரூப் 2 குரூப் 2a க்கன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2A விற்கான காலிப்பணியிடங்கள், வயது வரம்பு, கல்வி தகுதி, மற்றும் நடப்பாண்டில் குரூப் 2 மற்றும் 2A விற்கு புதிதாக கொண்டு வந்த மாற்றங்கள் குறித்தும் விளக்குகின்றார் சாந்தி ஐஏஎஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்.
காலிப்பணியிடங்கள்: குரூப் 2 மற்றும் 2A விற்கு அறிவிக்கப்பட்ட மொத்த காலிபணியிடங்கள் 2327 ஆகும். குரூப் 2 தேர்விற்கு 507 காலி பணியிடங்களும், குரூப் 2A தேர்விற்கு 1820 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரப்பப்பட உள்ள பதவிகள்: குரூப் 2A தேர்வின் மூலம் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர் மற்றும்நிரலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.குரூப் 2A தேர்வு மூலம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், முழுநேர விடுதிக் காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர், செயல் அலுவலர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நேர்முக எழுத்தர், கணக்கர், இளநிலை கணக்கர்,கண்காணிப்பாளர், விரிவாக அலுவலர், கீழ்நிலை செயலிட எழுத்தர் போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளது.
தேர்வில் மாற்றங்கள்: குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு கடந்த ஆண்டுகளில் பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்முக தேர்வு மூலம் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு நேர்முக தேர்வு இண்டர்வியூ கிடையாது.
குரூப் 2தேர்விற்கு பிரிலிம்ஸ் (objective) மற்றும் மெயின்ஸ் (descriptive தேர்வு) நடைபெறும். குரூப்2A தேர்விற்கு பிரிலிம்ஸ் (objective) மற்றும் மெயின்ஸ் (கணினி மூலம்) தேர்வு நடைபெறும். பிலிம்ஸ் தேர்வு குரூப் 2 மற்றும் 2ஏ இரண்டிற்கும் பொதுவாகவே நடைபெறும்.
புதிய மாற்றம்: TNFUSRC, சிபிஐ போன்ற பணிகளும் தற்போது டி என் பி எஸ் சி குரூப் 2 விற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சிபிஐ, வனக்காப்பாளர்களுக்கான தீர்வுகளும் இனி குரூப் 2 தேர்விற்கு கீழ் அடங்கும். சி.ஓ.ஏ (Certificate in Office Automation) தேர்வு முடித்து இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள் கண்டிப்பாக தமிழ் வழி சான்றிதழ் நீக்கும்பொழுது கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுவரம்பு: பொதுவாக குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு வயது வரம்புகள் 18 இல் இருந்து 60 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆனால் இது பலருக்கும் தெரியவில்லை. பதவிகளுக்கு ஏற்றார் போல் வயது வரம்புகள் வேறுபடும்.
தேர்விற்கான நேரம்: வழக்கமாக 10 மணிக்கு தொடங்கும் தீர்வு இந்த ஆண்டு 9:30 மணிக்கு தொடங்க உள்ளது. எனவே தேர்தல்கள் அனைவரும் 9:00 மணிக்கு தேர்வு நடக்கும் மையத்திற்கு சென்றடைந்திருக்க வேண்டும். 9.30 மணிக்கு மேல் தேர்வர்களை தேர்வரைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். 9.30 மணியிலிருந்து 12:30 மணி வரை தேர்வு நடைபெறும்.
தேர்விற்கான மதிப்பெண்கள்: தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. 200 கேள்விகளுக்கு மூன்று மணி நேரம் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் விதம் 200 கேள்விகள் கேட்கப்படும். குரூப் 2 மெயின்ஸ் Descriptive தேர்வில் ஆறு மதிப்பெண் கேள்வி 15 மதிப்பெண் கேள்வி என கேட்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: TNPSC குரூப் 2 விண்ணப்பத்திற்கான கடைசி தேதி ஜூலை 19, 2024 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த தேர்வில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேவர்கள் விண்ணப்பிக்கலாம்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment