TNPSC குரூப் 4 கட்-ஆப் எவ்வளவு தெரியுமா..? நிபுணர்கள் சொல்வது இதுதான் - Agri Info

Adding Green to your Life

June 10, 2024

TNPSC குரூப் 4 கட்-ஆப் எவ்வளவு தெரியுமா..? நிபுணர்கள் சொல்வது இதுதான்

 TNPSC Exam Group 4 Cut-off Marks:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 6244 காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 15.8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். கிட்டதட்ட 78% பேர் தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வினாத்தாள் பற்றிய ஒரு பகுப்பாய்வு, தோராய கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு இருக்கும்? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

“கடந்த வருடங்களுடைய வினாத்தாளை விட இந்த வருடம் அவ்வளவு சுலபமாக இல்லை எனவும், தமிழைப் பொறுத்தவரை 88லிருந்து 92 வரை மதிப்பெண் எளிதில் பெற முடியும். 95 பெரும் பட்சத்தில் அது நல்ல மதிப்பெண் ஆகவே அமையும் என தனியார் அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தார்.

மேலும், தமிழைப் பொறுத்தவரை இலக்கணத்தில் புதிதாக சில கேள்விகள் இந்த ஆண்டு கேட்கப்பட்டிருந்தது. இலக்கணம், இலக்கியத்தில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. வழக்கமாக 25 மதிப்பெண்கள் கணக்கு கேள்விகள் கேட்கப்படும் ஆனால் இந்த ஆண்டு 27 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதில் 20 கேள்விகள் அனைவராலும் பதிலளிக்க கூடியதாக இருந்தது. சில கேள்விகள் நேரம் செலவு செய்து எழுத கூடியதாக இருந்ததாக ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தார்.

பொது அறிவை பொருத்தவரை சுலபமாக இருந்தாலும், ஒரு பத்து கேள்விகள் தரமாக கேட்கப்பட்டிருந்தது. விடை அளிப்பதற்கு சற்று சிரமமாக இருந்திருக்க கூடும். தற்போதைய நிகழ்வை பொருத்த கேள்விகள் டிஎன்பிசி தரத்தை தாண்டி எஸ் எஸ் சி போன்ற மத்திய அரசு தேர்வில் காண தரத்தில் கேட்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நாட்டு நடப்புகளையும், செய்தித்தாள் வாசித்தல் பழக்கம் இருப்பவர்களும் இதனை எளிதில் பதிலளிக்க முடியும் எனரமேஷ் தெரிவித்தார். 170 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு மதிப்பெண்களும் நிச்சயம் தேர்வில் வெற்றி வாய்ப்பை தரும் என ரமேஷ் தெரிவித்தார்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 


No comments:

Post a Comment