வாக்கிங் செல்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான உடற்பயிற்சியாக இருக்கிறது. வாக்கிங் சென்று உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். ஆனால் உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்க நடைப்பயிற்சி மட்டுமே போதாது என்று சிலர் கூறுகின்றனர்.
நீங்கள் உங்கள் உடலில் இருக்கும் கலோரிகளை எரித்து எடையை குறைக்க வாக்கிங்கை பின்பற்றுபவரா? அப்படி என்றால் ஒரு கிலோமீட்டர் நடந்தால் எத்தனை கலோரிகள் எரிக்கப்படும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
1 கிமீ தூரம் நடக்கும் போது எத்தனை கலோரிகள் எரிக்கப்படும்?
நாம் ஏற்கனவே குறிப்பிட்டப்படி உடற்பயிற்சியின் எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாக வாக்கிங் இருக்கிறது. இதயத்தை அரோக்கியமாக் வைப்பது முதல் சுவாச மண்டலத்தை கட்டுக்குள் வைத்திருப்பது வரை வாக்கிங் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 1 கிலோ மீட்டர் வாக்கிங் சென்றால் ஒருவரின் உடலில் இருந்து எத்தனை கலோரிகள் எரிக்கப்படும் என்ற கேள்விக்கு உண்மையான பதில் என்னவென்றால் நபருக்கு நபர் மாறுபடும் என்பதே. ஆம், இந்த விஷயம் ஒருவரின் எடை மற்றும் நடையின் வேகத்தைப் பொறுத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வாக்கிங் செல்லும் போது கலோரிகளை எரிப்பதை பாதிக்கும் காரணிகள் சிலவற்றை இனி பார்க்கலாம்.
எடை:
வாக்கிங்கின் போது கலோரி எரிக்க ஒரு நபரின் எடை கணிசமான பங்கு வகிக்கிறது. பொதுவாக உடல் பருமனான நபர்கள் நடைபயிற்சியின் போது அதிக கலோரிகளை எரிக்க முடியும். ஏனெனில் அவர்கள் நடக்க அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டும். உதாரணமாக, 90 கிலோ எடையுள்ள ஒருவருடன் ஒப்பிடும்போது, 70 கிலோ எடையுள்ள ஒருவர் 1 கிலோமீட்டர் நடக்கும் போது குறைவான கலோரிகளையே எரிக்கிறார்.
வேகம்:
ஒருவர் தன்னுடைய நடைபயிற்சியின் போது எவ்வளவு வேகமாக நடக்கிறார் என்பதும் அவர் எவ்வளவு கலோரிகளை எரிக்க முடியும் என்பதற்கு பங்களிக்கிறது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கு 3-4 கிமீ நடப்பதைக் காட்டிலும், ஒரே மணி நேரத்தில் 5 கிமீ முதல் 6 கிமீ நடந்தால் அதிக கலோரிகள் எரிக்கப்படும். வாக்கிங்கின் போது வேகமாக நடப்பது இதய துடிப்பு மற்றும் ஆற்றல் செலவை அதிகரிக்கிறது. இது உடலில் இருக்கும் அதிக கலோரியை எரிக்க வழிவகுக்கிறது.
நடக்கும் இடம்:
நடைப்பயிற்சிக்காக நாம் நடந்து செல்லும் இடத்தின் நிலப்பரப்பும் கூட கலோரி செலவழிக்கும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. downhill terrain-ல் நடப்பதை விட, hilly terrain நிலப்பரப்பில் நடப்பது அதிக விளைவுகளை ஏற்படுத்தி அதிக கலோரி செலவாகிறது.
வயது:
வயதுக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் குறைகிறது, எனவே வாக்கிங் செல்லும் வயதானவர்களை விட இளம் வயதில் இருப்பவர்கள் கலோரிகளை அதிகமாக எரிக்க முடியும். தவிர பொதுவாக பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு அதிக muscle mass உள்ளன, இதன் காரணமாக வாக்கிங் செல்லும் போது ஆண்களின் உடலில் இருந்து சற்று அதிக கலோரி எரிக்கப்படும்.
கலோரி எரிப்பு தொடர்பாக மதிப்பிடப்பட்ட தகவல்கள்:
சுமார் 55 கிலோ எடையுள்ள நபர் ஒரு மணி நேரத்திற்கு 5 கிமீ மிதமான வேகத்தில் நடப்பதால், ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 50-60 கலோரிகளை எரிக்க முடியும்.
அதே நேரம் 70 கிலோ எடையுள்ள நபர் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் சென்றால் சுமார் 60-75 கலோரிகளை எரிக்க முடியும்.
அதுவே 90 கிலோ எடையுள்ள ஒருவர் மிதமான வேகத்தில் 1 கிலோ மீட்டர் நடப்பதன் மூலம் 80-100 கலோரிகளை எரிக்க முடியும்.
அதிக கலோரிகளை எரிப்பது எப்படி?
வாக்கிங் செல்லும் போது அதிக கலோரிகளை எரிக்க ஒரு சிறந்த விறுவிறுப்பாக நடந்து செல்வது. சற்று அதிகமான வேகத்தில் சுறுசுறுப்பாக நடந்து செல்வதால் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இது அதிக கலோரி செலவாக உதவும். வேகமான நடைப்பயிற்சி அல்லது வாக்கிங் செல்லும் போது இடையில் சில நிமிடங்கள் ஓடுவது அதிக கலோரிகளை எரிக்க உதவும். கரடுமுரடான மற்றும் சீரற்ற நிலப்பரப்பு கொண்ட மலை பாதை போன்றவற்றில் நடக்கலாம். தவிர உங்களது தினசரி வாக்கிங் தொலைவில் கூடுதல் கிலோ மீட்டர்களை சேர்க்கவும். இது உங்கள் ஒட்டுமொத்த கலோரி செலவை அதிகரிக்க சிறந்த வழியாக இருக்கும்.
நடைப்பயிற்சி அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
தினசரி வழக்கமான அடிப்படையில் நடைபயிற்சி செல்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தசைகளை பலப்படுத்துகிறது, மனநிலையை சிறப்பாக வைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்துகிறது. எல்லா வயதினரும் அடிப்படையாக செய்ய கூடிய எளிதான உடற்பயிற்சி இது. மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க சிறந்த தேர்வாகவும் அமைகிறது.
No comments:
Post a Comment