குரூப்-1 தோராய கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு ? நிபுணர்கள் கூறுவது என்ன..? - Agri Info

Adding Green to your Life

July 21, 2024

குரூப்-1 தோராய கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு ? நிபுணர்கள் கூறுவது என்ன..?

 தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது.துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் போன்ற 92 காலி பணியிடங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வு நடைபெற்றது.

நடப்பாண்டில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் பாதிக்கு பாதி தேர்வர்கள் குரூப் 1 தேர்வை எதிர் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில ஆண்டுகளாகவே தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 1 தேர்வின் தோராயிர கட் ஆப் மார்க் எவ்வளவு இருக்கும்? என்பது குறித்து தென்காசி மாவட்டம் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர்ரமேஷ் இடம் கேட்டு தெரிந்து கொள்வோம்.

தென்காசி மாவட்டம் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தது,“குரூப் 1 தேர்வு சுமார் 1.9 லட்சம் தேர்வர்கள் மட்டுமே எதிர்கொண்டுள்ளனர். குரூப்-1 தேர்வு பிலிம்ஸ் மெயின்ஸ் மற்றும் இன்டர்வியூ என மூன்று வகையில் தேர்வுகள் நடைபெறும். பிலிம்ஸ் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். இது 300 மதிப்பெண்ணுக்கு நடைபெறும். தேர்வு ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வழங்கப்படும். இதில் நெகட்டிவ் மார்க் கிடையாது. இது அப்ஜெக்டிவ் டைப் தேர்வு.
டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒவ்வொரு ஆண்டுகளும் வினாத்தாளின் தரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வு ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு வினாத்தாள் மிகவும் தரமானதாக இருந்தது. தமிழ்நாட்டில் பெரிதும் மதிக்கக் கூடிய மற்றும் முக்கியமான தேர்வாக இருப்பது குரூப்-1 தேர்வு. இந்த தேர்வு பட்டப்படிப்பு முடித்தவர்கள் எழுதலாம்.

குரூப் 1 கட் ஆப்: குரூப்-1 தேர்வில் 200 கேள்விகளில் 135 அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகள் சரியாக விடையளித்தால் மெயின்ஸ் தேர்விற்கு நிச்சயம் தயார் செய்யலாம்.


குரூப் 1 தேர்வு வினாத்தாள்: இந்த ஆண்டு குரூப் ஒன் தேர்வு வினாத்தாள் மிகவும் தரமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. மிகவும் நுணுக்கமாக புரிந்து கொண்டு பதிலளிக்கக்கூடிய கேள்விகளாக இருந்தது. அறிவியல், பொருளாதாரம், நாட்டு நடப்புகளை தொடர்ந்து படிக்கும் பொழுது இது போன்ற கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்க முடியும்.135 மற்றும் அதற்கு மேல் இந்த ஆண்டிற்கான குரூப்-1 தேர்விற்கான கட் ஆப் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் சாந்தியை அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4, 2 ஆகிய தேர்வுகளுக்கு எளிதில் தயார் செய்யலாம். ஆனால் தற்போது போட்டி அதிகரித்துள்ளதால் கேள்வித்தாளின் தரமும் அதிகரித்துள்ளது.

**வெற்றி விகிதம்:**1:20 விகிதத்தில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 2000 தேர்வர்கள் மெயின்ஸ் தேர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment