2-2-2 மெத்தட் என்றால் என்ன? வைரலாகும் வெயிட் லாஸ் ட்ரெண்ட் ! - Agri Info

Adding Green to your Life

July 10, 2024

2-2-2 மெத்தட் என்றால் என்ன? வைரலாகும் வெயிட் லாஸ் ட்ரெண்ட் !

 பல்வேறு உடற்பயிற்சிகள், சமசீரான உணவுகள், பழங்கள் உள்ளிட்டவை எடை குறைப்புக்கு உதவுகின்றன . அவற்றில் ஒன்று 2-2-2 மெத்தட் ஆகும். சமீப காலமாக வைரலாகி வரும் இந்த புதிய 2-2-2 முறை குறைத்த வைரல் போஸ்ட் ஒன்று அதிகமான பார்வையாளர்களை பெற்றது. இந்த முறையானது, ஒருவரின் வளர்சிதை மாற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், 2-2-2 எடை குறைப்பு நடைமுறையில் கீட்டோ, இடைப்பட்ட நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது(இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்), கார்போஹைட்ரேட் லோடிங் மற்றும் HIIT உடற்பயிற்சிகள் போன்ற பல்வேறு நுட்பங்கள் இதில் அடங்கும்.

நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, 2-2-2 முறையானது இரண்டு பெரிய பாட்டில்களில் தண்ணீரைக் குடிப்பது, பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது மற்றும் இரண்டு வேலை நடைபயிற்சிகளை மேற்கொள்வது ஆகியவை அடங்கும்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த ஹெல்த் கோச்சான ஜென்னா ரிஸோ கூறியதாவது, பருகும் தண்ணீரின் அளவு என்பது வானிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தது. பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை ஒருவரின் உணவுத் திட்டத்திற்கு கூடுதல் நன்மைகளை வழங்குகிறன்றன என்றும் அவர் விளக்கினார். மேலும், இந்த முறையை நீங்கள் மூன்று வாரங்கள் பின்பற்றினால், உங்கள் எடை குறைந்திருக்கும், மேலும், இன்னும் பின்பற்ற வேண்டும் என்றும் உங்களுக்கு தோன்றும் என்றும் குறிப்பிட்டார்.

சமச்சீர் உணவுடன் உடலுக்கு ஹைட்ரேஷனை வழங்குவதில் இந்த முறை நன்மை அளிக்கிறது. இதில் உயர்பயிற்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் தண்ணீர் ஆகியவை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதாவது தினமும் 2 பழங்கள் மற்றும் 2 காய்கறிகள் மற்றும் 2 லிட்டர் தண்ணீர் மற்றும் ஒரு நாளைக்கு 2 வேளை நடைபயிற்சி ஆகியனவாகும்.

ஒருவர் தன் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதால், ஒவ்வொரு நாளும் இரண்டு பாட்டில் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், தினசரி இரண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகியவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு எடை குறைக்கவும் உதவும். மற்றும், இரண்டு வேளை நடைபயிற்சி மேற்கொள்வதால், இதயம் மற்றும் மனநிலை மேம்படுவதோடு, மேலும் உடலில் இருக்கும் கூடுதல் கலோரிகளை எரிக்கிறதுஇயன் கே. ஸ்மித், எம்.டி மற்றும் தி மெட் ஃப்ளெக்ஸ் ஆகிய இரண்டு டயட்டின் ஆசிரியர்களால் இது முதன்முதலாக உருவாக்கப்பட்டது: பர்ன் பெட்டர் ஃப்யூயல், பர்ன் மோர் ஃபேட், 2-2-2 முறை ஆகியவை மெட் ஃப்ளெக்ஸ் டயட் வெயிட் லாஸ் ப்ரோக்ராமின் ஒரு பதிப்பாக விவரிக்கப்படுகிறது. டாக்டர். ஸ்மித்தின் கூற்றுப்படி, மொத்தத்தில் 2-2-2 முறை ஆனது பல்வேறு வகையான உணவு வகைகள் (கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்), உணவு அல்லாத தொடர்புடைய அம்சங்கள் மற்றும் இரண்டு வகையான உடற்பயிற்சிகள் ஆகியனவாகும்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment