பள்ளிக் கல்வித் துறையில் , 2025-2026ஆம் ஆண்டிற்குரிய தங்கள் நியமன அலகிற்கான தொகுதி -11 மற்றும் தொகுதி IV இன் கீழுள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் , தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமன காலிப்பணியிட மதிப்பீட்டினைத் தயார் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டியுள்ளது.
எனவே , 2024-2025ஆம் ஆண்டிற்குரிய உதவியாளர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் . சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமன காலிப்பணியிட மதிப்பீட்டினைத் தயார் செய்யும் பொருட்டு . 15.04.2025 முதல் 14.03.2026 வரை பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்கள் குறித்த விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பணியிடம் வாரியாகத் தனித்தனியாகத் தயார் செய்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும் . அவ்வாறு மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது நியமன அலகில் பணியிடங்களுக்குரிய விவரங்களையும் சேர்த்து இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் வருவாய் மாவட்ட அளவில் தொகுப்புப் பட்டியலைத் தயாரித்து 30.06.2024 - க்குள் Excel லில் TAU- Marutham Font ( மருதம் ) இல் தட்டச்சு செய்து.
இவ்வலுவலக " அ 4 " பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் , நகல் ஒன்றினை இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி விவரங்களைத் தயார் செய்கையில் தொடக்கக் கல்வி இயக்ககம். மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் , SCERT மற்றும் SSA போன்ற பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள இயக்ககங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களில் உள்ள ஆசிரியரல்லாப் பணியிடங்கள் சார்ந்தும் விவரங்கள் பெறப்பட்டு தொகுத்து அளிக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Estimate of Vacancy 2025-2026 DSE Proceedings👇👇👇
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment