சிறுநீரக கற்கள் தோன்றிவிட்டால், உயிரையே கொல்லும் அளவுக்கு வலி எடுத்துவிடும்.. கிட்னியில் கற்கள் பெரிதாக இருந்தால், உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.. ஆனால், ஆரம்ப நிலையில் இருந்தால், இந்த கற்களை எளிய முறையில், உணவு முறையிலேயே குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். உணவு பழக்கத்தை சரியாக கடைப்பிடித்தால், கற்கள் வராமல் தடுக்கலாம்.. அத்துடன், ஆரம்பகட்ட சிறுநீரகக் கற்களையும் இதே உணவு பழக்கத்தால் கரைத்துவிடலாம்.
எனவே, உங்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது உங்களுக்கு சிறுநீரகக் கல் இருந்தாலோ என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்பதைச் சரிபார்ப்பது அவசியம். அந்த வலிமிகுந்த சிறுநீரகக் கற்களைத் தடுக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் தவிர்க்க வேண்டிய மூன்று உணவுகள் உள்ளன, அவை மதிய உணவு இறைச்சி, சோடா பாப் மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியனவாகும்.
நெச்சுரோஃபேதிக் மருத்துவரான டாக்டர் ஜானைன் பௌரிங், சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் இருந்தால் தவிர்க்க வேண்டிய மூன்று மோசமான உணவுகளை குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், ஹைதராபாத்தில் உள்ள கேர் ஹாஸ்பிடல்ஸ் பஞ்சாரா ஹில்ஸின் சிறுநீரக ஆலோசகரான டாக்டர் பி வம்ஷி கிருஷ்ணா கூறியதாவது, சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்கள் மதிய உணவு இறைச்சி, சோடா பாப் மற்றும் உலர்ந்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவது நல்லது என்று கூறியுள்ளார்.
மதிய உணவு இறைச்சி என்பது டெலி மீட் அல்லது கோல்ட் கட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மதிய உணவு இறைச்சிகள் பொதுவாக க்யூரிங், ஸ்மோக்கிங் அல்லது ப்ரீசர்வேடிவ் சேர்ப்பதன் மூலம் பதப்படுத்தப்படுகின்றன. மேலும் ஹாம், துர்க்கி, கோழி, சிக்கன், ரோஸ்ட் பீப், சலாமி, போலோக்னா மற்றும் பெப்பரோனி போன்றவையும் பதப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுநீரக கல் உருவாவதற்கு பங்களிக்கும் உணவுகள்:
சாதாரணமாக இருக்கும் நபர்கள் உப்பு அதிகம் உள்ள உணவுப்பொருளையும் மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களையும் சாப்பிடக் கூடாது. ஒருவேளை இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் அது சிறுநீரக கற்கள் அதிகமாக உருவாவதற்கு தூண்டும் வகையில் இருக்கும் என்று மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் இஷி கோஸ்லா கூறுகிறார்.
சிறுநீரக கல் உருவாவதற்கு பங்களிக்கும் உணவுகள் குறித்து டாக்டர் கிருஷ்ணா கூரியாவது.
மதிய உணவு இறைச்சி: மதிய உணவு இறைச்சி ஆனது சோடியம், கொழுப்பு மற்றும் சில சமயங்களில் சர்க்கரைகள் மற்றும் நைட்ரேட்டுகள்/நைட்ரைட்டுகள் சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் அதிகமாக இருக்கலாம், அவை அடிக்கடி சாப்பிடுவதற்கு உகந்ததல்ல. அதிகப்படியான சோடியம் சிறுநீரில் கால்சியம் அளவை அதிகரிக்கலாம், அதே நேரத்தில் அனிமல் ப்ரோட்டீனை அதிகமாக சாப்பிட்டால் யூரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து இரண்டும் சிறுநீரகத்திலும் கல் உருவாவதற்கு வாய்ப்பளிக்கின்றன.
சோடா பாப்: பல சோடாக்களில், குறிப்பாக கோலாக்களில், அதிக அளவு பாஸ்போரிக் ஆசிட் உள்ளது, இது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும். கூடுதலாக, அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிட்டால் உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. மேலும், அவை சிறுநீரக கற்கள் உண்டாக்குவதற்கான மற்றொரு காரணங்களாகும்.
உலர்ந்த பழங்கள்: சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருந்தால் ஆக்சலேட் சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. அதாவது திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வால்நட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய உணவுகளில் அதிகளவு ஆக்சலேட் இருப்பதால் இந்த உணவுகளை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
இதைத்தவிர, உப்பு, சிப்ஸ், பாப்கார்ன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, பாதாம், பிஸ்தா, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, கூல்டிரிங்ஸ்கள், சாக்லேட், ஆல்கஹால் இவைகளை தவிர்த்தாலே போதும், எப்போதுமே சிறுநீரகத்தில் கற்கள் சேராது.. கல்லின் அளவு 5 மிமீக்கு குறைவாக இருந்தால் மட்டுமே வீட்டு மருத்துவம் பயன்படுமே தவிர, இதுவே தீர்வுகிடையாது. கற்களின் அளவு பெரிதானால், டாக்டரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment