பொது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும் என்பதால் பெண்கள் குறிப்பாக 40-களில் தங்கள் உடலை நன்றாக பராமரிப்பது முக்கியம். குறிப்பிட்ட வயதிற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், ஈஸ்ட்ரோஜன் லெவல் குறைவது உள்ளிட்டவை காரணமாக பெண்களின் muscle mass, வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு அடர்த்தி உள்ளிட்டவற்றை பாதிக்கப்படலாம். இந்த பாதிப்புகளை எதிர்த்துப் போராட, சீரான ஆரோக்கியமான டயட் மற்றும் வழக்கமான அடிப்படையிலான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது உள்ளிட்டவை முக்கியம்.
தினசரி உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முடியும். மேலும் நீரிழிவு, இதய நோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நாள்பட்ட நிலைமைகளை உருவாகும் அபாயத்தை குறைத்து கொள்ள முடியும். தவிர மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.
அதே போல் கார்டியோவாஸ்குலர் ஒர்கவுட்ஸ் இதய ஆரோக்கியம் மற்றும் ஸ்டாமினாவை மேம்படுத்துகின்றன, அதே நேரத்தில் ஸ்ட்ரென்த் ட்ரெயினிங்ஸ் குறிப்பாக muscle mass மற்றும் எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவி செய்கின்றன. மேலும் ஆக்ட்டிவாக இருப்பது ஆற்றலை அதிகரிப்பதோடு, எண்டோர்ஃபின்ஸ்களை வெளியிடுவதன் மூலம் மனநிலையை மேம்படுத்துகிறது. இது இரவு நேரம் நன்கு தூங்க ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்க்கலாம்…
40 வயதுகளில் இருக்கும் பெண்கள் உடல் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மக்களை சந்திக்க, நேர்மறை சமூகத்தை உருவாக்க அவர்களுக்கு கிடைக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகவும் இருக்கும்.
இனி பெண்கள் தங்கள் 40-களில் மகிழ்ச்சியாகவும், ஃபிட்டாகவும் இருக்க உதவும் 5 ஆரோக்கியமான டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
ஆரோக்கியமான காலை உணவு:
வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதில் ஆரோக்கியமான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தேவையற்ற கலோரி நுகர்வை குறைக்கிறது. சிலர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் காலை உணவை தவிர்க்கிறார்கள். இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
தினசரி உப்பு நுகர்வை குறைக்க வேண்டும்:
உயர்ந்த ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த சுகாதார பிரச்சனைகளை தவிர்க்க, சோடியம் உட்கொள்ளலை தினசரி 2,300 மி.கி-க்கும் குறைவாகக் கட்டுப்படுத்த அமெரிக்கன் டயட்ரி கைடன்ஸ் பரிந்துரைக்கின்றன.
போதுமான சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும்:
உணவை சமைக்கும் முன் அல்லது உணவு சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவி கொள்வது இன்றியமையாதது. இதற்கு சோப்பை பயன்படுத்தலாம். எப்போதுமே சிறந்த சுகாதாரத்தை பராமரிப்பது நோய்களை தடுக்க முக்கியமான வழியாகும்.
அடிக்கடி உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்:
ஏரோபிக் பயிற்சிகள் ஆற்றலை வழங்குகின்றன மற்றும் இதய துடிப்பை கட்டுப்படுத்துகின்றன, எனவே இவை ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. பெண்கள் தங்களின் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
போதுமான தூக்கம்:
பெண்கள் தினசரி இரவு 8 மணிநேரம் நிம்மதியாக தூங்குவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அறிவாற்றல் திறன்கள், நோய் எதிர்ப்பு சக்தி, உற்பத்தித்திறன், ஆரோக்கியம் மற்றும் மன அமைதி ஆகியவற்றுக்காக நாள்தோறும் போதுமான அளவு தூங்குவது முக்கியம்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment