இரத்த புற்றுநோய் என்பது உங்கள் இரத்த அணுக்களை பாதிக்கும் ஒரு வகையான புற்றுநோயாகும், இது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த அணுக்களின் முக்கிய செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. லுகேமியா, லிம்போமா மற்றும் மைலோமா ஆகியவை இரத்த புற்றுநோயின் பொதுவான வகைகள் ஆகும். உங்கள் உடலிலிருக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் சக்திவாய்ந்த தொற்றுநோய் எதிர்ப்பு போராளிகள் ஆகும்.
இவை, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உங்கள் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவுகின்றன. உங்கள் உடலுக்குத் வெள்ளை இரத்த அணுக்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவதால், அவை பொதுவாக வளர்ந்து ஒழுங்கான முறையில் பிரிக்கப்படுகின்றன. ஆனால் லுகேமியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு, எலும்பு மஜ்ஜையில் அதிகளவு அசாதாரண வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால், அவை சரியாக செயல்படாமல் கட்டிகளாக மாறி, புற்றுநோய் செல்களை உருவாக்குகின்றன.
லிம்போமா என்பது லிம்போசைட்டுகள் எனப்படும் உங்கள் இரத்த அணுக்களை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயாகும். லிம்போசைட்டுகள் ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள் ஆகும், அவை தொற்று மற்றும் நோயை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன. அவை பெரும்பாலும் நமது நிணநீர் மண்டலத்தில் வாழ்கின்றன. ஆனால் லிம்போமாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு, அங்கு அதிகப்படியான அசாதாரண லிம்போசைட்டுகளை உற்பத்தி ஆகி உடலின் திறனைக் குறைக்கின்றன.
மைலோமா என்பது பிளாஸ்மா செல்களை குறிவைக்கிறது. பிளாஸ்மா செல்களானது நோயெதிர்ப்பு சக்திக்கு முக்கியமானது. ஆனால் மைலோமாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு, ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது. இரத்தப் புற்றுநோய் கண்டறிதலில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் கண்டறியப்படுகிறார், மேலும் இந்த நோயால் ஆண்டுதோறும் 70,000 உயிரிழப்புகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப அறிகுறிகளை கண்டறிதல்:
1. தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம்: ஒருவருக்கு சோர்வு ஏற்படுவது பொதுவானது என்றாலும், நீடித்த மற்றும் விவரிக்க முடியாத சோர்வு மற்றும் பலவீனம் ஆகியவை அடிப்படை சிக்கல்களைக் குறிக்கலாம். இரத்த புற்றுநோயானது ஆரோக்கியமான இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் உடலின் திறனை அடிக்கடி தடுக்கிறது, இதன் காரணமாக இரத்த சோகை மற்றும் தொடர்ச்சியான சோர்வுக்கு வழிவகுக்கிறது.
2. தற்செயலான எடை குறைப்பு: நியூயார்க்கின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர் மருத்துவமனையின் லுகேமியா நிபுணர் & ஆரம்பகால மருந்து மேம்பாட்டு நிபுணரான டாக்டர் எய்டன் எம். ஸ்டீன், எம்டி, உணவு மாற்றங்கள் அல்லது அதிகரித்த உடல் ரீதியான செயல்பாட்டுகள் இல்லாமல் திடீர் எடை குறைப்பு இரத்த புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தைக் குறிக்கலாம் என்று கூறியுள்ளார்.
3. நோய்த்தொற்றுகளுக்கு அதிக பாதிப்பு: இரத்த புற்றுநோய்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைத்து, தொற்றுநோய்க்கான பாதிப்பை அதிகரிக்கிறது. எனவே அடிக்கடி மற்றும் நீடித்த நோய்கள் குறித்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
4. சிராய்ப்பு மற்றும் இரத்தப்போக்கு: சிராய்ப்பு என்பது தோலில் கீறல்கள் இன்றி அடர் நிறத்தில் இருக்கும் ஒரு காயம் அல்லது தழும்பு, ஈறுகளில் இரத்தப்போக்கு அல்லது சிறிய காயங்களுக்குப் பிறகு நீடித்த இரத்தப்போக்கு ஆகியவை சில இரத்த புற்றுநோய்களுடன் தொடர்புடைய இரத்த உறைதல் சிக்கல்களைக் குறிக்கிறது.
5. இரவு வியர்வை: வெப்பம் அல்லது உடல் ரீதியான செயல்பாடு இல்லாமல் ஏற்படும் அதிகப்படியான இரவு வியர்வைகள் ஆபத்தானவை. அவை சில இரத்தப் புற்றுநோய்களுடன் தொடர்புடைய அறிகுறிகளாகும்.
No comments:
Post a Comment