சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய அறிவிப்பின்படி மொழிப்பெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) பணிக்கு 5 பேர், மொழிப்பெயர்கள் (இந்தி), மொழிப்பெயர்கள் (கன்னடா), மொழிப்பெயர்கள் (மலையாளம்) பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி விவரங்கள்
மொழிப்பெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு பாடத்துடன் முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தெலுங்கு மொழியிலும் மொழிப்பெயர்த்து எழுதவும், படிக்கவும் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழக அரசு பணியாளர் ஆணையம் சார்பில் தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலும் இருந்து தமிழிலும், தெலுங்கில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தெலுங்கு மொழியிலும் மொழிப் பெயர்ப்பு தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.
மொழிப்பெயர்ப்பாளர் (இந்தி) பணியாளர் பணிக்கு டிகிரி படிப்பை ஆங்கிலம், இந்தி பாடத்துடன் முடித்திருக்க வேண்டும். அதோடு இந்தியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து இந்தியிலும் மொழிப்பெயர்க்கவும், எழுதவும் படிக்கவும், தெரிந்திருக்க வேண்டும். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழக அரசு பணியாளர் ஆணையம் சார்பில் இந்தியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து இந்தியிலும், தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிப் பெயர்ப்பு தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.
இதே போல் கன்னடா, மலையாளம் ஆகிய மொழிப்பெயர்ப்பாளர் பணிக்கும் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக குறைந்தபட்சம் ரூ.56,100
வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்
mhc.tn.govi.in என்ற இணையதளம் மூலம் இம்மாதம் ஜுலை 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய விண்ணப்பத்த தொகை செலுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். பிற வழிகளில் வரும் விண்ணப்பம் ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு
இப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு 100 மதிப்பெண்களுக்கான முதன்மை தேர்வு (ஓ.எம்.ஆர் முறை), அதன்பிறகு 100 மதிப்பெண்களுக்கான மெயின் தேர்வு, அதன்பிறகு 25 மதிப்பெண்ணுக்கான Viva தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி அடைபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
0 Comments:
Post a Comment