வயதானவர்களை தாக்கும் டிமென்ஷியா.. புறக்கணிக்கக் கூடாத 6 எச்சரிக்கை அறிகுறிகள்.! - Agri Info

Adding Green to your Life

July 10, 2024

வயதானவர்களை தாக்கும் டிமென்ஷியா.. புறக்கணிக்கக் கூடாத 6 எச்சரிக்கை அறிகுறிகள்.!

 டிமென்ஷியா என்பது மூளையில் ஏற்படும் பாதிப்பு அல்லது மூளையில் ஏற்படும் காயம் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடு ஆகும். இது நம் சிந்தனைத் திறன், நினைவாற்றல் போன்றவற்றை பாதிக்கிறது. டிமென்ஷியா என்பது ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் சுயமாகச் செய்யும் திறனைப் பாதிக்கும். அதாவது, நினைவாற்றல், பார்வை, பேச்சு, புரிதல், சுற்றுப்புறங்களைப் பற்றிய விழிப்புணர்வு, நடத்தையில் மாற்றம் மற்றும் அசாதாரண தூக்க முறைகள், தொலைந்து போவது ஆகியவை அடங்கும்.

வார்த்தைகளைத் தேடுவதில் சிரமம் மற்றும் குறுகிய கால நினைவாற்றல் போன்ற பிரச்சனைகள் ஆரம்ப அறிகுறிகளுக்கு பொதுவான எடுத்துக்காட்டுகள் என்றாலும், டிமென்ஷியா என்பது வயது ரீதியான ஒரு சாதாரண விஷயம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

வயதுக்கு ஏற்ப லேசான நினைவாற்றல் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் நம் அன்றாட நடவடிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது. இத்தகைய அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது நோயின் முன்னேற்றத்தைத் தடுக்க உதவுகிறது மற்றும் நோயாளிகள் சுதந்திரமான வாழ்க்கையை வாழவும் உதவுகிறது.

News18

டிமென்ஷியா குறித்து 6 எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி பார்ப்போம்..

டிமென்ஷியா தினசரி வாழ்க்கையை சீர்குலைக்கிறது:

முக்கியமான தேதிகளை மறந்துவிடுதல் அல்லது அதே தகவலை திரும்பத் திரும்பக் கேட்பது, வயதானால் ஏற்படும் மறதியை விட மிக தீவிரமான அறிகுறிகளாக இருக்கலாம்.

நிதிகளை திட்டமிடுதலில் சிரமம்:

புனேவின், பேனரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவரான டாக்டர் சின்மய் கும்பர் கூறியதாவது, நிதி தொடர்பான விஷயங்களை நிர்வகிப்பது அல்லது செய்முறையைப் பின்பற்றுவது போன்ற வழக்கமான வேலைகளை முடிக்க கடினமாக இருப்பதை ஒருவர் அனுபவித்தல், இது நிர்வாக செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது.

தேதிகள் அல்லது இடத்தை மறைத்தல்:

டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள் பழக்கமான இடங்களில் இருந்து தொலைந்து போவது அல்லது தேதிகள் மற்றும் பருவங்களை மறப்பது ஆகியவை அடங்கும்.

மனநிலை மாற்றங்கள்:அதிகரித்த எரிச்சல் அல்லது மனச்சோர்வு போன்ற மனநிலையில் ஏற்படும் இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் டிமென்ஷியாவின் வளர்ச்சியுடன் ஒத்துப்போகலாம். மேலும், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் வழக்கத்தை விட அதிக பதட்டமாகவோ அல்லது பயமாகவோ தோன்றலாம்.

குழப்பம் மற்றும் தொடர்புகொள்வதில் சிரமம்:

பேச்சுக்களைப் பின்பற்றுவதில் சிக்கல் அல்லது பொருத்தமான சொற்களைக் கொண்டு வருவது அறிவாற்றல் குறைபாட்டைக் குறிக்கலாம். ஆரம்ப நிலையில், டிமென்ஷியா நோயாளிகள் அடிக்கடி குழப்பத்தை அனுபவிக்கலாம். அவர்கள் முகங்களை அடையாளம் கண்டுகொள்வது, நாள் அல்லது மாதத்தை தீர்மானிப்பது அல்லது தன்னை தானே கண்டறிவது போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படும்.

பொருட்களை தவறாக வைப்பது:

தவறான இடங்களில் பொருட்களை வைப்பது அல்லது யாரையாவது திருடிவிட்டார்கள் என குற்றம் சாட்டுவது போன்றவை நினைவாற்றல் பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம். உதாரணமாக, அவர்கள் தங்கள் வாகனத்தின் சாவியை இழப்பது, அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை மறப்பது போன்றவையாகும்.

சிகிச்சை:

  • வரும் முன் காப்பதே சிறந்தது. டிமென்ஷியாவும் வராமல் தடுக்கலாம். அதாவது, சிறந்த கல்வி, சமூகமயமாவது, வழக்கமான உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றாலும், குறுக்கெழுத்து, சுடோகு, திரைப்படம் பார்ப்பது, யோகா மற்றும் தியானம் போன்ற மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவதாலும், மது மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பதாலும் டிமென்ஷியாவைத் தடுக்க உதவும்.

    குறைந்தப்பட்ச அறிவாற்றல் குறைபாடு (MCI) ஸ்டேஜ் என்று அறியப்படும் டிமென்ஷியாவை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த புதிய மருந்துகள் கிடைக்கின்றன, இது தீவிரமான டிமென்ஷியாவை தடுக்க உதவுகிறது மற்றும் நோயாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை சுயமாகச் செய்யும் திறனைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment