சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 8 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

July 2, 2024

சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 8 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 சென்னை உயர் நீதிமன்றத்தில் மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்


INTERPRETER

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

மொழிப்பெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) – 5

மொழிப்பெயர்ப்பாளர் (ஹிந்தி) – 1

மொழிப்பெயர்ப்பாளர் (கன்னடம்) – 1

மொழிப்பெயர்ப்பாளர் (மலையாளம்) – 1

கல்வித் தகுதிஇளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மொழிகளை 12 ஆம் வகுப்பில் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.07.2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ 1000, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

 



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment