மூன்று நாட்களுக்கு உணவை தவிர்த்தால் என்ன ஆகும் தெரியுமா..? உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன..? - Agri Info

Adding Green to your Life

July 1, 2024

மூன்று நாட்களுக்கு உணவை தவிர்த்தால் என்ன ஆகும் தெரியுமா..? உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன..?

 மனித உடல் ஒரு இயந்திரம் போன்றது. தினமும் அதன் வேலைகளை அது சரியாக செய்து கொண்டிருக்கும். இருப்பினும் நீண்ட நாள் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்ணாவிரதம் இருப்பது இந்திய பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மற்றும் பழங்காலத்திலிருந்தே இது கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து விளக்கும் டாக்டர் பல்லேட்டி சிவா கார்த்திக் ரெட்டி, மூன்று நாட்களுக்கு நாம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை விவரித்துள்ளார்.

அதில் “நீங்கள் 3 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும்போது, ​​உங்கள் உடல் பல உடலியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆரம்பத்தில், உங்கள் உடல் எனர்ஜிக்காக சேமிக்கப்பட்ட குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது. முதல் 24 மணி நேரத்திற்குள், இந்த கிளைகோஜன் குறைந்து, உங்கள் உடல் குளுக்கோனோஜெனீசிஸை உற்பத்தி செய்ய தொடங்குகிறது. உடலில் உள்ள அமினோ அமிலங்கள் போன்ற கார்போஹைட்ரேட் அல்லாத மூலங்களிலிருந்து இந்த குளுக்கோஸை உருவாக்குகிறது.

இரண்டாவது நாளில், உங்கள் உடல் கெட்டோசிஸைத் (ketosis) தொடங்குகிறது, அதாவது சேமித்த கொழுப்புகளை கீட்டோன்களாக மாற்றி உடல் அதனை எனர்ஜியாக பயன்படுத்துகிறது, குறிப்பாக மூளைக்கு இந்த எனர்ஜி தேவைப்படும். இந்த வளர்சிதை மாற்றம் தசை திசுக்களைப் பாதுகாக்க உதவுகிறது.

News18

உடலின் வளர்சிதை மாற்றம் எவ்வாறு ஒத்துப்போகிறது?

உங்கள் வளர்சிதை மாற்றம் இன்சுலின் அளவைக் குறைப்பதன் மூலமும், நார்பைன்ப்ரைன் அளவை அதிகரிப்பதன் மூலமும் ஒத்துப்போகிறது. இது உடலில் உள்ள கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கும். மேலும் இது சிறுநீரகங்களில் இருந்து அதிகப்படியான உப்பு மற்றும் தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த சமயத்தில் நீரிழப்பு அதிகரிக்கும் என்பதால் உடல் எடை குறைய தொடங்கும்.

மூன்று நாட்களில் நோர்பைன்ப்ரைன் அளவு அதிகரிப்பதன் காரணமாக உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் தற்காலிகமாக அதிகரிக்கலாம், ஆனால் உணவு உட்கொள்ளும் பற்றாக்குறையை உடல் சரிசெய்வதால், எனர்ஜியை பாதுகாக்க வளர்சிதை மாற்றம் பின்னர் மெதுவாகிவிடும்.

72 மணிநேர உண்ணாவிரதம் அதாவது 3 நாட்களுள் எந்த உணவையும் சாப்பிடாமல் இருப்பதால் பல நன்மைகள் மற்றும் ஆபத்துகளும் வரும் என டாக்டர் ரெட்டி விளக்கியுள்ளார்.

நன்மைகள் :

  • உண்ணாவிரதம் இருப்பதால் நமது உடலில் உள்ள சேதமடைந்த செல்களை அகற்றி ஆரோக்கியமான புதிய செல்கள் வளர ஊக்குவிக்கிறது.

  • உண்ணாவிரதம் இருப்பதால் இன்சுலின் அளவு மேம்படும் இதனால் டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகும் அபாயம் குறைகிறது.

  • உண்ணாவிரதம் இருக்கும் போது உண்டாகும் கெட்டோசிஸின் போது மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (BDNF) உற்பத்தி அதிகரிப்பதன் காரணமாக நமது மனத்தில் தெளிவு அதிகரிக்கும்.

  • உண்ணாவிரதம் இருப்பதால் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்த உடல் எடை குறையும்.
    அபாயங்கள் :

    • உண்ணாவிரதம் இருக்கும் போது நமது உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்.

    • உண்ணாவிரதம் இருப்பதால் சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இதனால் நமது உடலில் பாதிப்புகள் உண்டாகும்.

    • தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கும் போது இரத்தச் சர்க்கரைக் குறைந்து தலைச்சுற்றல், தலைவலி மற்றும் மயக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    • வளர்சிதை மாற்ற மாற்றங்கள், பசி காரணமாக வயிற்று வலி, சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment