சமூக நலத் துறையில் உள்ள காலிபணியிடங்களுக்கு தகுதியுடைய மதுரையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியில் உள்ள பாதிக்கப்பட்ட (சகி-ஒன் ஸ்டாப் சென்டர்) பெண்களுக்கான கூட்டுதல் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இரண்டு வழக்குப் பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதிய முறைகள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை பட்டம் படித்து முடித்தவராக இருக்க வேண்டும். வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதல் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு குறைந்த பட்சம் ஒரு வருடம் கவுன்சிலிங் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம்.பயண செலவு திரும்ப பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இந்த பணிக்கு மதுரையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
மேலும் பணி ஆனது காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரையும், மதியம் 12 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை என மூன்று சுழற்சி முறைகளில் இருக்கும். இந்த பணிக்கான மாத ஊதியம் ரூபாய் 18,000 ஆகும். விண்ணப்பத்தார்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட படிவத்தில் தங்களது சுய விவரங்களை பூர்த்தி செய்து அத்துடன் தகுதி சான்றிதழ்களுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மதுரை 20 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment