Search

சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்குவது எப்படி? தமிழக அரசு பயிற்சி

 இண்டர்நெட் யூகத்தில் எல்லாம் விரல் நுனியில் முடிந்து விடுகிறது. ஸ்மார்ட்போன்கள் பல சாகசங்களை சாத்தியமாக்குகின்றன.

யூடியூப் மூலம் பலரும் தங்களது தனித்திறமைகளையும், பல்வேறு தகவல்களை அதில் பகிர்ந்து வருமானம் பார்க்கின்றனர். அப்படி உங்களுக்கும் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு அதற்கு பயிற்சி வழங்குகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ” யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது வரும் 22.07.2024 முதல் 24.07.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்நிறுவனத்தின் கட்டிடட வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நீங்கள் எவ்வாறு யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

முகவரி:
தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை -600 032.

தொலைபேசி எண்கள்: 04422252081 22252082 / 8668100181 9841336033
முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment