Search

தலையணை இல்லாமல் தூங்குவது நல்லதா.? கெட்டதா.? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 மனித வாழ்வில் தூக்கம் என்பது மிக மிக முக்கியம். தூக்கமின்மை பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் தூங்கும் போது செய்யும் சில தவறுகள் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். சிறிய தவறுகளால் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

இன்றைய பிஸியான வாழ்க்கையில் நல்ல தூக்கம் மிகவும் அவசியம். சரியான தூக்கம் இல்லாவிட்டால், எரிச்சலுடன் எந்த வேலையும் ஓடாது, மேலும் நோய் வாய்ப்படவும் அதிகம். நம்மில் பலர் தலையணையை பயன்படுத்தி தூங்குகிறோம். ஆனால், தலையணையை தவறாக பயன்படுத்தினால் கழுத்து வலி, முதுகு பிரச்சினைகள், சரியான சுவாசம் இன்றி தூங்குதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, தலையணையை சரியாகத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது முக்கியம்.


பெரும்பாலானவர்கள் தூங்கும்போது தலையணை பயன்படுத்துவார்கள், இதில் சிலர் இரண்டு தலையணைகளையும் பயன்படுத்துவர். ஆனால், சுகாதார நிபுணர்கள் கூறுவதுபடி, தலையணையைத் தொடர்ந்து பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். நீண்ட நாட்கள் தலையணை பயன்படுத்தினால் கழுத்து வலி, முதுகு பிரச்சினைகள் மற்றும் கடுமையான நோய்களுக்கு வாய்ப்புள்ளது.

News18

குழந்தைகள் தலையணை வைத்து அதிக நேரம் தூங்கினால் கழுத்து சுளுக்கு ஏற்படலாம். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தலையணைகளில் இது குறைவாகும். சாதாரண தலையணைகள் பிரச்சனைகளை உண்டாக்கும். டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களுக்கு தலையணைகளை மாற்றுவது ஒவ்வாமை பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே, தலையணையை தவிர்ப்பது நல்லது.

தலையணை பயன்படுத்துவதால், கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி, மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படக்கூடும். உயரமான தலையணை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை பாதிப்பதால் முடி உதிரும் பிரச்சினை வரலாம். இரு தலையணை பயன்படுத்துவோருக்கு நல்ல தூக்கம் வராது, இதனால் அவர்கள் நாள் முழுவதும் சோம்பேறியாக இருக்கும். மேலும், தூக்க குறைவால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

அதன் நன்மைகள் :

தலையணை இல்லாமல் தூங்கினால், கழுத்து மற்றும் முதுகு வலி குறையும். முதுகெலும்பின் நிலை சரியாக இருக்கும், இதனால் இடுப்பு, கைகள், மற்றும் தோள்பட்டை வலி ஏற்படாது.

  • தலையணை இல்லாமல் தூங்குவது உடல் முழுவதும் நல்ல இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்.

  •  ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும்.

  • ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கும்.

  •  தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை போன்றவற்றை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும்.

  • தோள்பட்டை அழுத்தத்தைக் குறைத்து தோள்பட்டை வலியைத் தடுக்கும்.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment