வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கி வருகிறது. 2023-2024 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாத இறுதியில் முடிவடைகிறது.
இந்தக் காலக்கெடுவுக்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் மற்றும் ரிட்டர்ன் தாக்கல் செய்வது மட்டும் போதாது. ரிட்டர்ன் தாக்கல் முடிந்தவுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் வரி அறிக்கைகளுக்கு மின்னணு சரிபார்ப்பு (இ-வெரிஃபை - E-Verify) செய்யப்பட வேண்டும்.
பொதுவாக, ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை இ-வெரிஃபை சரிபார்ப்புக்கான காலக்கெடுவை வழங்கும். முன்னதாக இந்தக் காலக்கெடு 120 நாட்களாக இருந்தது. இது இம்முறை 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோர் ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்து, உரிய தேதிக்குள் இணையத்தில் சரிபார்க்கவில்லை என்றால், அந்த ரிட்டர்ன் கோரிக்கைகள் செல்லாது
வருமான வரித்துறை மின்னணு சரிபார்ப்புக்கு பல்வேறு வழிகளை பரிந்துரைக்கிறது. அந்த வழிமுறைகள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
இ-வெரிஃபைக்கான வழிமுறைகள்
டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்
ஆதார் OTP
வங்கிக் கணக்கு அல்லது டிமேட் கணக்கைப் பயன்படுத்தி மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டைக் கொண்டு சரிபார்ப்பது
ஆஃப்லைன் பயன்முறையில் வங்கி ஏடிஎம் மூலம் சரிபார்ப்பது
நெட் பேங்கிங் மூலமாகவும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஆதார் OTP மூலம் இ-வெரிஃபை செய்வது எப்படி?
இ-வெரிஃபை பக்கத்தில், 'I would like to verify using OTP on mobile number with Aadhaar' என்ற அம்சத்தை கிளிக் செய்து 'Continue’ அழுத்தவும்
ஆதார் OTP பக்கத்தில் உள்ள 'நான் எனது ஆதார் விவரங்களைச் சரிபார்க்க ஒப்புக்கொள்கிறேன்' என்ற தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, ஆதார் OTP ஐ உருவாக்கும் அம்சத்தை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு வெரிஃபை பொத்தானை அழுத்தவும்
அதன் பிறகு வெற்றிகரமாக வெரிஃபை செய்யப்பட்டதற்கான தகவலுடன் பரிவர்த்தனை ஐ.டி. (transaction ID) இருக்கக் கூடிய பக்கம் தோன்றும். அந்த பரிவர்த்தனை ஐடியை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல முகவரிக்கு ஐடி வருமானம் சரிபார்க்கப்பட்டதாக உறுதிப்படுத்தும் தகவல் வரும்.
ஆன்லைன் வங்கிச் சேவை வாயிலாக இ-வெரிஃபை செய்வது எப்படி?
இ-வெரிஃபை பக்கத்தில், 'Through Net Banking' என்ற இணைப்பைக் கிளிக் செய்து, தொடரவும்
நீங்கள் இ-வெரிஃபை செய்ய விரும்பும் வங்கியைத் தேர்ந்தெடுத்து 'continue’ என்பதை கிளிக் செய்யவும்
'Disclaimer’-ஐ படித்துப் புரிந்துகொண்டு 'continue’ என்பதைக் கிளிக் செய்யவும்
அதன் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கு நெட் பேங்கிங் உள்நுழைவு பக்கத்திற்குச் செல்லும்
பயனர் ஐ.டி. மற்றும் கடவுச்சொல் மூலம் நெட் பேங்கிங்கில் உள்நுழையவும்
வங்கியின் இணையதளத்தில் e-Filing என்ற அம்சத்தில் உள்நுழைவதற்கான இணைப்பு இருக்கும், அதை கிளிக் செய்யவும்
பக்கத்தில், 'Download Engineer Utility’ என்பதைக் கிளிக் செய்யவும்
Engineer Utility பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவல் முடிந்ததும், உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும் என்ற பக்கத்தில் 'I have downloaded and install Engineer Utility' என்பதைத் தேர்ந்தெடுத்து 'தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்
தரவு அடையாளப் பக்கத்தில் வழங்குநர், சான்றிதழைத் தேர்ந்தெடுத்து வழங்குநரின் கடவுச்சொல்லை உள்ளிடவும். அதன் பிறகு Sign-ஐ அழுத்தவும்
பரிவர்த்தனை ஐ.டி-யுடன் வெற்றிச் செய்தி பக்கம் தோன்றும். அந்த பரிவர்த்தனை ஐ.டி-யைக் குறித்துக் கொள்ளவும்.
இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஐடி வருமானம் சரிபார்க்கப்பட்டதாக உறுதிப்படுத்தும் தகவல் வரும்.
மின்னணு சரிபார்ப்பில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் உண்டா?
கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இ-வெரிஃபை செய்யாவிட்டால், உங்கள் வருமானம் தாக்கல் செய்யப்பட்டதாக கருதப்படாது. ஐ.டி.ஆர் தாக்கல் செய்யாதது வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் பொருந்தக்கூடிய அனைத்து விளைவுகளையும் சந்திக்க வேண்டும்.
இருப்பினும், காலக்கெடுவுக்குள் சரிபார்ப்பை ஏன் செய்ய முடியவில்லை என்று கோரிக்கை வைக்கலாம். இந்தக் கோரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள காரணம் செல்லுபடியாகும் பட்சத்தில், வருமான வரித் துறை இ-வெரிஃபை மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும்.
மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC) என்றால் என்ன?
மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC) என்பது 10 இலக்க எண் குறியீடாகும்.
சரிபார்ப்பு செயல்முறைக்காக, வங்கி கணக்கு மற்றும் டிமேட் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட இ-ஃபைலிங் போர்டல், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு இது அனுப்பப்படும்
EVC ஆனது உருவாக்கப்பட்ட நேரத்திலிருந்து 72 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment