தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா..? - Agri Info

Education News, Employment News in tamil

July 30, 2024

தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா..?

 சிவப்பு வாழைப்பழத்தை பொதுவாக செவ்வாழைப்பழம் என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள் மற்றும் பச்சை வாழைப்பழங்களை காட்டிலும் அடர்த்தியாக இனிமையாக இருக்கும் செவ்வாழை அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியவை. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, பிட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ளது.

வைட்டமின்களும், மினரல் சால்ட்களும் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்கள் சத்து நிறைந்தது. அதிலும் செவ்வாழை அதிக சத்து கொண்டது. இருப்பினும், இது மஞ்சள் வாழைப்பழத்தைப் போல இனிப்பு இல்லை, ஆனால் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, செவ்வாழைப்பழம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

News18

தனித்துவமான சுவை மற்றும் நன்மைகளுக்கு பெயர் பெற்ற செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

  1. நோய் எதிர்ப்பு சக்தி: செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

  2. செரிமானம்: செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

  3. எடை கட்டுப்பாடு : செவ்வாழைப்பழத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

  4. இதய ஆரோக்கியம் : செவ்வாழைப்பழத்தில் ஏராளமான பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

  5. ஆற்றல் : செவ்வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது உடனடி ஆற்றலை வழங்குகிறது மற்றும் சோர்வை நீக்குகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது உடல் ரீதியான செயல்பாடுகளின் போதும் இது சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  6. மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது, இது மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது, மேலும், இது மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கிறது.

  7. தோல் மற்றும் முடிக்கு நன்மை : செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றவும் உதவுகிறது.


உங்கள் உணவில் செவ்வாழைப்பழத்தைச் சேர்ப்பது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும், ஆனால் உங்கள் வழக்கமான உணவில் ஏதேனும் புதிய உணவுப் பொருளைச் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

🔻🔻🔻


No comments:

Post a Comment