இன்றைய நவீன உலகில் இளம் வயதினர் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லா வயதினரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 இன் தொடக்கத்தில் இருந்து, மக்களிடையே இன்டர்நெட் அக்சஸ் பயன்பாடு வேகமாக அதிகரித்தது, ஏனெனில் அந்த காலகட்டத்தில் நாம் ஒரு நபரிடம் தொடர்பு கொள்ளவோ அல்லது சமூக ரீதியாக தொடர்பு கொள்ளவோ ஒரே வழி இதுதான். அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக மாணவர்கள் பல விஷயங்களைக் கண்டறியவும், அவர்களின் அறிவை மேம்படுத்தவும், தொலைதூரத்திலிருக்கும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும் மிகப்பெரிய தளங்களாகும். நாம் அனைவரும் அறிந்தபடி, சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன, ஏனெனில் இது மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க உதவுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் சமூக தளங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.
சைபர்புல்லிங் என்பது உலகளவில் உள்ள முக்கிய கவலைகளில் ஒன்றாகும், இது சமூக ஊடகங்களில் இணையத்தில் மற்றொரு நபரைக் கையாளவும், அவமானப்படுத்தவும் மற்றும் தீங்கு விளைவிக்கவும் நிறைய நடக்கிறது. மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம். மேலும் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களில் அதிகப்படியான ஈடுபாடு மாணவர்களை அவர்களின் கல்வியிலிருந்து திசை திருப்புகிறது.
சாதாரணமாக 13 வயது நிறைவடைந்தவுடன் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். ஆனால் போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் 13 வயது நிறைவடைந்தாலும், பெரும்பாலான வெப்சைட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் ஆப்ஸின் நன்மை தீமை குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது அவசியமாகும்.
பாதுகாப்பான இன்டர்நெட் அக்சஸை பெற்றோர்கள் பயன்படுத்துவதும், அதன் நன்மைகளை குழந்தைகளுக்கு கற்பிப்பதும் அவசியம் ஆகும். ஏனெனில், குழந்தைகள் அதன் நன்மைகளை புரிந்துகொண்டு அவற்றை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தூக்க முறை பாதிக்கப்படுகிறது.சமூக ஊடகங்களின் முக்கிய எதிர்மறை விளைவுகளில் ஒன்று, மாணவர்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு குறைவதாகும். தூக்கமின்மை மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. குறிப்பாக மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான தூக்கம் கட்டாயமாகும்.
No comments:
Post a Comment