பெருங்குடல் புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் ஒரு மிக மோசமான நோயாக இருந்து வருகிறது. உணவு சார்ந்த பழக்க வழக்கங்கள் பெருங்குடல் புற்றுநோய் உண்டாவதில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டுள்ளது. சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவப்பு இறைச்சி என்பது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சி போன்றவற்றை குறைக்கிறது. இது ஃப்ரஷாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட நிலையிலோ சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
சிவப்பு இறைச்சி சாப்பிடுதல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் ஆகிய இரண்டிற்குமான தொடர்பு என்பது குறிப்பாக இந்த இறைச்சியை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல்களை முதன்மையாக குறிக்கிறது. பொதுவாக பதப்படுத்திக்களாக பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் நமது உடலில் கார்சினோஜனிக் காம்பவுண்டுகளாக மாற்றப்படுகின்றன. இந்த காம்பவுண்டுகள் பெருங்குடலை அடையும் பொழுது செல் புரணியை சேதப்படுத்தி, இறுதியில் புற்று நோய்க்கு வழி வகுக்கிறது.
கூடுதலாக சிவப்பு இறைச்சியில் காணப்படும் ஹீம் இரும்பு என்பது மோசமான துணை பொருட்களை உருவாக்கி குடல் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த செல்களில் தொடர்ச்சியாக சேதம் ஏற்படும் பொழுது அதன் விளைவாக ஜீன்களில் மியூட்டேஷன் தூண்டப்பட்டு, இறுதியில் பெருங்குடல் புற்றுநோய் உருவாகிறது. இந்த மாதிரியான சேதத்தை ஏற்படுத்தும் காம்பவுண்டுகள் ஹெட்டிரோசைக்கிளிக் அமைன்கள் மற்றும் பாலிசைக்கிலிக் அமைன்கள் எனப்படுகிறது. இவை சிவப்பு இறைச்சியை பதப்படுத்தும் மற்றும் சமைக்கும் செயல்முறையின்போது உருவாகிறது. இது மாதிரியான அபாயங்களை ஏற்படுத்துவதால் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டியது கட்டாயம்.
ஒரு நாளைக்கு ஒருவர் 70 கிராமுக்கும் குறைவான சிவப்பு இறைச்சியை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று ஒரு சில நாடுகளில் உள்ள ஆரோக்கியம் சார்ந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு நீங்கள் பின்வரும் யுத்திகளை பின்பற்றலாம்:-
சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளின் அளவுகளை உங்களுடைய உணவில் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சிவப்பு இறைச்சிக்கு பதிலாக பருப்பு வகைகள், வெள்ளை நிற இறைச்சி அதாவது சிக்கன் அல்லது மீன் போன்றவற்றை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய சரிவிகித உணவை பின்பற்றுங்கள். இவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு அவசியமானது.
வெஜிடேரியன் உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கிறது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
0 Comments:
Post a Comment