ஒரு சிலருக்கு கார் அல்லது பேருந்தில் பயணிக்கும் போது தலைசுற்றல், வாந்தி, குமட்டல், வியர்வை அல்லது தலைவலி போன்றவை ஏற்படும். இதன் காரணமாக அவர்களின் பயணம் மோசமானதாக மாறும். பயணத்தில் இருக்கும்போது பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனை தான் இது. நம்மைச் சுற்றியுள்ள பலரும் கார், ரயில், விமானம், படகு அல்லது பொழுதுபோக்கு பூங்கா சவாரிகளின் போது இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கான காரணம் என்ன?
பயணத்தின் போது உங்கள் உள் காது உணர்வதிலிருந்து நீங்கள் பார்க்கும் காட்சிகள் வேறுபடும் போது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. பார்வை மற்றும் உள் காது சமிக்ஞைகளுக்கு இடையிலான இந்த முரண்பாடு, இயக்கம் பற்றிய முரண்பட்ட செய்திகளை உங்கள் மூளைக்கு அனுப்புகிறது. இதனால் தான் வாந்தி வருகிறது.
இது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான சில எடுத்துக்காட்டு இதோ:
நீங்கள் பயணிப்பதை உங்கள் கண்கள் பதிவு செய்து, நீங்கள் நகரும் செய்தியை உங்கள் மூளைக்கு அனுப்புகிறது. இதற்கிடையில், நீங்கள் அசையாமல் அமர்ந்திருப்பதை உங்கள் உள் காது உணர்ந்து, நீங்கள் நகரவில்லை என்ற செய்தியையும் உங்கள் மூளைக்கு அனுப்புகிறது. செய்திகளில் உள்ள இந்த முரண்பாட்டின் காரணமாக, மூளையால் அதைச் சரியாகச் செயல்படுத்த முடியாமல் போகும் போது வாந்தியும் தலைசுற்றலும் குமட்டலும் ஏற்படுகின்றன.
இதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?
வாந்தி வருவதற்கான தடுப்பதற்கான சிறந்த வழி என்னவென்றால், இதுபோன்ற நிலையை ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தவிர்ப்தே ஆகும். ஆனால், அது பெரும்பாலான சமயங்களில் சாத்தியமில்லை. இயக்க நோயைத் தவிர்க்க உதவும் சில உத்திகள் இதோ:
கார் அல்லது பேருந்தின் முன்புறத்தில் எப்போதும் அமரவும்.
விமானங்கள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஜன்னல் இருக்கையைத் தேர்வு செய்யவும்.
படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ளவும்.
தூங்குவது அல்லது அடிவானத்தைப் பார்ப்பதும் உதவும்.
நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
வாகனத்தில் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யவும்.
காருக்குள் உங்கள் பார்வையை ஒருமுகப்படுத்தும் செயல்களான படிப்பது அல்லது ஃபோனைப் பயன்படுத்துவது போன்ற செயல்களைத் தவிர்க்கவும்.
பயணத்தின் முன் அல்லது பயணத்தின் போது மிதமான உணவை உட்கொள்ளுங்கள்.
அதிமான அல்லது காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.
இசையைக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்
இஞ்சி மிட்டாய் சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment