தலைமுடிக்கு சாயம் பூசுவது , டை அடிப்பது மற்றும் பல்வேறு வகையான தலைமுடி சிகிச்சைகள் செய்துகொள்வது ஆகியவை இன்று சாதாரண விஷயமாக மாறிவிட்டன. புதிய தோற்றத்தையும் ஸ்டைலையும் முயற்சித்து பார்ப்பது சந்தோஷமாக இருந்தாலும், இதை பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்தில் உண்டாகும் விளைவுகளை அறிந்துகொள்வதன் மூலம், பின்னால் வரக்கூடிய ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க உதவும்.
நம்முடைய உச்சந்தலைக்கு அருகாமையில் கண்கள் இருப்பதால், ஹேர் டையில் உள்ள அம்மோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு, ரெசார்சினோல், ஆல்கஹால், பராபென்ஸ் போன்ற ரசாயனங்கள் தற்செயலாக நம் கண்களில் பட வாய்ப்புள்ளது. இந்த இரசாயனங்களின் தீவிரம் மற்றும் ஹேர் டை அல்லது தலைமுடி வண்ணத்தில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட இரசாயனங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பலவிதமான கண் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எதிர்பாராவிதமாக ஹேர் டை கண்களில் படுவதால் வரக்கூடிய பிரச்சனைகள்:
கண் எரிச்சல் - தற்காலிகமாக சிவந்து போகும்; தீக்காயம் பட்ட்து போல் எரியும்; ஏதோ கொட்டுவது போன்ற உணர்வுகள் இருக்கும்.
கருவிழிப்படல பாதிப்பு - வலி, ஒளிச்சேர்க்கை மற்றும் மங்கலான பார்வை போன்றவை ஏற்படலாம். ஆனால் பாதிப்பு அதிகம் இருந்தால், அரிதான சமயங்களில் நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம்.
வெண்படல அழற்சி – சிவந்து போதல், கண்களில் நீர் வடிதல் மற்றும் அசௌகரியமாக உணர்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்
இரசாயன தீக்காயங்கள் - கண் இமைகள் மற்றும் கருவிழிப்படலத்தில் வலி, சிவத்தல், வீக்கம் மற்றும் மங்கலான பார்வைக்கு வழிவகுக்கும்
அலர்ஜி - அரிப்பு, வீக்கம், சிவத்தல் மற்றும் படை நோய்
கெரட்டின் சிகிச்சை - முடியை நேராக்க இது பயன்படுகிறது. இதில் ஃபார்மால்டிஹைடு உள்ளது. அதன் காரணமாக கண் எரிச்சல் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
மினாக்ஸிடில் - முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் இந்த சிகிச்சையில் கடுமையான விழித்திரை பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எதிர்பாராவிதமாக ஹேர்டை கண்களில் பட்டால் என்ன செய்ய வேண்டும்?
வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கண்களைச் சுத்தப்படுத்தவும். அப்படி சுத்தப்படுத்தும் போது இமைகளை மேலும் கீழும் இழுத்து எல்லாத் திசைகளிலும் பார்க்கவும்.
மேலும் பரவாமல் இருக்க கண்களை தேய்க்காமல் இருக்க வேண்டும்
கண் இமைகளில் இருக்கும் அதிகப்படியான சாயத்தை சுத்தமான துணி அல்லது துடைப்பான்கள் மூலம் மெதுவாக துடைத்து எடுக்கவும்
வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்க ஐஸ்கட்டியை வைத்து ஒத்தடம் கொடுங்கள்.
இவை எதுவும் பலனளிக்கவிட்டால், உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவரை சென்று பாருங்கள்
தலைமுடிக்கு நிறம் அல்லது ஹேர் டை அடிக்கும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:தேவைக்கு மேல் சாயத்தை உச்சந்தலையில் தங்கவிடாதீர்கள்.
இதை பயன்படுத்துவதற்கு முன் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏதாவது ஏற்படுகிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்
புருவங்கள் மற்றும் இமைகளுக்கு ஒருபோதும் சாயம் பூசாதிர்கள்.
ஹேர் டை அடிக்கும்போது பாதுகாப்பிற்கு கண்ணாடிகளை அணிந்துகொள்ளவும். அதேப்போல் காண்டாக்ட் லென்ஸ்களையும் அகற்றிவிடுங்கள்.
நீங்கள் அமர்ந்திருக்கும் அறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும்
கையுறைகளை அணியுங்கள். கைகளை கழுவுவதற்கு முன் உங்கள் கண்களைத் தொடாதீர்கள்.
0 Comments:
Post a Comment