Search

குழந்தைகள் அதிக நேரம் போன் பாக்குறாங்களா ..? பெற்றோர்கள ஸ்க்ரீன் டைம் பற்றி தெரிஞ்சுக்கோங்க

 

மனித உடம்பில் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கண் உள்ளது. ஆனால் பொதுமக்கள் பலரும் கண்களை சரியான முறையில் பராமரிப்பது இல்லை. குழந்தைகளும் இந்த காலகட்டத்தில் மொபைல் ஃபோன் இல்லாமல் இருப்பதில்லை. இது போன்ற பல இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களது உடம்புகளை கவனித்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

டிஜிட்டல் சாதனங்களின் ஒளிரும் திரைகள் முதல் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் வரை நமது கண்கள் தினமும் பல்வேறு சவால்களுக்கு ஆளாகின்றன. இருப்பினும், கண்களுக்கு சரியான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும் நாம் அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் தினமும் சில அத்தியாவசிய கண் பராமரிப்பு, பழக்கங்களை கடைபிடித்து கண்களை கவனித்து வந்தால் கண் பிரச்சனைகளை எளிதில் தவிர்க்கலாம். கண்களை எவ்வாறு பராமரிப்பது? குழந்தைகளுக்கு மொபைல் ஃபோன் கொடுக்கலாமா என பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து உள்ளார் விழுப்புரம் மாவட்ட அரசு கண் மருத்துவர் டாக்டர் உமாராணி.

பிறந்த குழந்தையின் முதல், 5 வருட குழந்தைகள் வரை விட்டமின் ஏ சொலுஷன் ட்ராப்ஸ் ஆறு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்துக்கள் நிறைந்துள்ள காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் போனில் உள்ள வெளிச்சத்தை குறைத்து மொபைலை பயன்படுத்தக் கூடாது. மங்கலான வெளிச்சத்தில் படிக்கக் கூடாது. அதுபோன்று நடந்து கொண்டே படிக்கக் கூடாது. இதன் மூலம் பார்வை குறைபாடு, பார்வை பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் பெரியவர்களுக்கு பார்வை குறைபாடு, வயது தொடர்பான மாகுலர் சிதைவு (மாகுலர் டிஜெனரேஷன்) பிரச்சனை ஏற்படும். மேலும் டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு விழித்திரை கோளாறும் ஏற்படும். எனவே இந்த நோய் உள்ளவர்கள் கண் மருத்துவர் அணுகி கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். மேலும் கண்ணாடி அணியும் நபர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தங்களுடைய கண்ணாடிகளை பரிசோதித்து கொள்ள வேண்டும். குறிப்பாக கம்ப்யூட்டர் மொபைலில் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள், மற்ற நபர்கள் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது 20 நிமிஷம் கண்ணிற்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். அதனுடன் சிஸ்டம் பார்க்கும் நபர்கள் LUBRICANT EYE DROPS மற்றும் ANTI REFLECTIVE COATING கிளாசஸ் பயன்படுத்திக் கொள்ளலாம்

அதுபோல இரண்டு முதல் மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஆஸ்டிஜிமாடிசம் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு கெரடோகோனஸ் நோய் ஏற்படும். எனவே குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து இந்த நோயை வராமல் தடுப்பதற்கு அவர்களுக்கு தேவையான பரிசோதனை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஸ்கிரீனிங் டைம் கட்டாயமாக இல்லை. முடிந்த அளவிற்கு குழந்தைகளை டிவி பார்க்காமலும், செல்போன்களை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமையாகும். அப்படி கட்டாயமாக தேவை என்றால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் மட்டும்தான் குழந்தைகளின் ஸ்கிரீனிங் டைம் ஆக இருக்க வேண்டும்.

பொதுமக்கள் தூங்கி எழுந்தவுடன் அல்லது கண்களில் ஏதேனும் தூசி பட்டால் உடனடியாக கண்களை தேய்ப்பது கூடாது. இறந்தவுடன் கண்களை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு மற்ற வேலைகளை பார்க்க வேண்டும். அதுபோல தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. நிச்சயமாக இப்போ உள்ள மக்கள் இரவு நேரத்தில் மொபைலில் உள்ள ஐ கம்பர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி செல்போன்களை பயன்படுத்திகிறார்கள், அப்படியே அந்த ஆப்ஷனை பயன்படுத்தினாலும் 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் கண்ணுக்கும், முளைக்கும் நேரான நரம்பு தொடர்பு உள்ளதால், நீங்கள் ஓய்வெடுத்தால் தான் மூளையும் ஓய்வெடுக்கும்.

கண்களுக்கு எண்ணெய், தாய்ப்பால் ஊற்றலாமா?

பொதுமக்களுக்கு கண்களில் கண் எரிச்சல், கண்களில் தூசி விழுந்தாலோ கண்களில் எண்ணெய் விடுவது, தாய்ப்பால் ஊற்றுவது, கண்ணை சுத்தம் செய்கிறேன் என எலுமிச்சை சாறு ஊற்றுவது போன்ற எந்த ஒரு செய்கையும் செய்யக்கூடாது.

பொதுமக்களுக்கு கண் சிகிச்சை திட்டம் : அரசு மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்ட மூலம் பொது மக்களுக்கு கண்சதை, கண்புரை சிகிச்சை செய்யப்படுகிறது என கண் மருத்துவர் உமாராணி தெரிவித்தார்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment