தினமும் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா..? மகத்தான மருத்துவ குணங்கள்..! - Agri Info

Adding Green to your Life

July 10, 2024

தினமும் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா..? மகத்தான மருத்துவ குணங்கள்..!

 

பூண்டு சமையல் மரபுகள், பல்வேறு கலாச்சார நடைமுறைகள், மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் சோர்வைப் போக்கவும், உழைப்பாளிகளின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டன. கிரேக்க ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் கூட தங்கள் தடகள செயல்திறனை மேம்படுத்த பூண்டு சாப்பிடுவார்கள்.
பூண்டு சளி, காய்ச்சலை நீக்கி, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இது தமனிகளில் பிளேக் படிவதைத் தடுக்கின்றதால், இதய நோய்களின் அபாயங்களை குறைக்க முடியும்.

பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயங்கள் குறைகின்றன. பூண்டின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் பெருங்குடல், வயிறு, கணையம், மற்றும் மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன. அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம், தசை, மற்றும் மூட்டு வலிகளை எளிதாக்கி கீல்வாதத்தைத் தடுக்க உதவுகின்றன.


News18

பூண்டு உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய்களை தடுக்கும். உடல் எடை குறைய, கொழுப்பை குறைக்க, எடை மேலாண்மைக்கு உதவும். முகப்பரு குறைக்க, சருமத்தை சுத்தப்படுத்தி உதவும். பாக்டீரியாக்களை குறைக்க, சருமத்தை தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

பூண்டு என்பது வெங்காயம், லீக்ஸ் மற்றும் குடைமிளகாயுடன் தொடர்புடைய ஒரு மூலிகையாகும். இது இதயம் மற்றும் இரத்த அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அல்லிசின் பூண்டு வாசனையையும் உண்டாக்குகிறது மற்றும் பூண்டின் விளைவுகளையும் மாற்றும்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment