Search

இந்தியாவின் பெரும்பாலான நுரையீரல் புற்றுநோயாளிகள் தங்கள் வாழ்நாளில் புகைப்பிடித்ததேயில்லை.. அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்.!

 இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் வியத்தகு மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. பாரம்பரியமாக புகைப்பழக்கத்துடன் தொடர்புடையதாக அறியப்படும் நுரையீரல் புற்றுநோய், தற்போது இந்தப் பழக்கம் இல்லாத நபர்களையும் அதிகளவில் பாதிக்கிறது.

சமீபத்தில் நம்மை திடுக்கிடச் செய்யும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நுரையீரல் புற்றுநோயாளிகளில் கணிசமான பகுதியினர், குறிப்பாக பெண்கள், புகைப்பிடிக்காதவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்தப் போக்கு அபாய ஒலியை எழுப்புகிறது. ஏனென்றால் நாட்டில் நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் காரணிகளின் சிக்கலான தொடர்பை இது கோடிட்டு காட்டியுள்ளது. குறிப்பாக புகையிலை கட்டுப்பாட்டிற்கு அப்பாலும் தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்பதையும் ஆபத்து காரணிகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்தியுள்ளது.

News18

இதற்கு சுற்றுச்சூழல் காரணிகளின் பங்கை, குறிப்பாக காற்று மாசுபாட்டை வலியுறுத்துகிறார் டில்லியில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் டாக்டர்.விகாஸ் மிட்டல். புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு காற்று மாசுபாடு (PM2.5) குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறது. இந்தியாவில் உள்ள மற்றொரு பொது சுகாதார பிரச்சனையான காசநோயின் பரவலும் நுரையீரல் பாதிப்பை அதிகப்படுத்தி, புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கலாம்.

புகைப்பிடிப்பவரின் அருகில் அமர்ந்திருத்தல், ரசாயன தொழிற்சாலைகளில் பணிபுரிதல் மற்றும் மரபணு ஆகியவையும் நுரையீரல் புற்றுநோய்க்கு போதுமான பங்களிப்பைச் செய்கின்றன வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வு மூலம் நோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார் டாக்டர்.நீரஜ் கோயல்.

இந்த ஆய்வு முடிவுகளின் தாக்கங்கள் ஆழமானவை. நுரையீரல் புற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. கடுமையான விதிமுறைகள் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைப்பது, சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியமான படிகளாகும். மேலும் காசநோய் கட்டுப்பாட்டு திட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் மரபணு காரணிகளைப் புரிந்துகொள்வதற்கான ஆராய்ச்சியில் முதலீடு செய்வது ஆகியவற்றுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் பற்றிய பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவை நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் அவசியமாகும். புகைப்பிடிப்பதை நிறுத்துதல் மற்றும் காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டைத் தவிர்ப்பது உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல் போன்றவை புற்றுநோயின் ஆபத்தை கணிசமாகக் குறைக்கும்.

நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்:

  • தொடர் இருமல்: நீண்ட நாட்களாக நிற்காமல் இருமல் நீடிப்பது.

  • சளியில் ரத்தம்: எச்சிலில் ரத்தம் இருப்பது.

  • மூச்சு விடுவதில் சிரமம்: சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்.

  • குரல் கரகரப்பு: கரகரப்பாக மாறுவது போன்ற குரலில் ஏற்படும் மாற்றங்கள்.

  • மார்பு பகுதியில் வலி: ஆழமான சுவாசம், இருமல் அல்லது சிரிக்கும் போது மோசமடையக்கூடிய மார்பு வலி.

  • பசியின்மை மற்றும் உடல் எடை இழப்பு: பசியின்மை மற்றும் காரணமின்றி உடல் எடை இழப்பு.
    நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் முயற்சியில் நம்முன் உள்ள சவால்கள் மகத்தானவை என்றாலும், இந்தக் காரணிகளை கூட்டாக நிவர்த்தி செய்வது இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படக் கூடிய இறப்பு விகிதத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகரித்து வரும் இந்த சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம், சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி அவசியம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment