Search

இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் மேலும் உயர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 
தமிழ்நாட்டில் கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொடக்க கல்வித்துறையில் 2023-24ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியிடப்பட்டது.


ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த போட்டித் தேர்வு பின்னர் ஜூலை 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே உள்ள பணியிடங்களுடன், இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 2768ஆக உயர்ந்துள்ளது.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வருகிற 21-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.


இதையடுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களிடம் நேர்காணல் நடத்தி, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment