தூக்கமின்மை அல்லது அமைதியற்ற இரவுகளுடன் போராடுவது விரக்தியையும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும். தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒன்று மெக்னீசியம் குறைபாடு ஆகும். ஒரு அறிக்கையின்படி, பெரியவர்களில் 10 இல் 9 பேருக்கு அவர்களின் உடலில் போதுமான மெக்னீசியம் இல்லை மற்றும் அவர்களில் பெரும்பாலோர் மெக்னீசியத்தை பற்றி அறிந்திருக்கமாட்டார்.
மெக்னீசியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான அவசியமான ஒரு முக்கியமான மினெரல் ஆகும். இது வீக்கத்தை உருவாக்கும் காரணங்களை எதிர்த்து போராடுகிறது, இரத்த அழுத்ததை குறைக்கிறது, மேலும் தூக்கத்தின் தரத்தை உயர்த்துகிறது.
தூக்கப்பிரச்னை, தசை இறுக்கம், குறைவான ஆற்றல் ஆகியவை மக்னீசியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்றும், இந்த அறிகுறி உள்ளவர்கள் உணவைத் தாண்டி கூடுதல் மெக்னீசியம் சேர்க்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பலர் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலான மக்கள் உடல் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு மெக்னீசியம் எடுத்துக் கொள்வதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பல சத்துகளில் மெக்னீசியமும் ஒன்று.
தூக்க ஹார்மோனை சீராக்கும் மெக்னீசியம் :
மெக்னீசியம் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்துவதற்கான பொறுப்புடைய நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை செயல்படுத்துகிறது. மெக்னீசியம் நீங்கள் தூங்குவதற்கு மட்டுமல்ல, ஆழ்ந்த மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மெக்னீசியம் நரம்பு மண்டலத்தின் மீது செயல்பட்டு, ஆழமான, அமைதியான தூக்கத்திற்கு பங்களிக்கிறது. குறிப்பாக, மெக்னீசியத்தின் போதுமான அளவு மெலடோனின் இயற்கையான உற்பத்தி மற்றும் வெளியீட்டை ஊக்குவிக்கிறது, இதன் காரணமாக தூக்கம்-விழிப்பு சுழற்சியை சீராக்க உதவுகிறது மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
மெக்னீசியம் குறைபாடு உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும் :
குறைந்த மெக்னீசியம் அளவைக் கொண்ட நபர்கள் இரவில் அடிக்கடி விழித்தெழுதல், சீர்குலைந்த தூக்கம் மற்றும் மோசமான தூக்கத்தின் தரம் ஆகியவற்றை அனுபவிக்கலாம். மெக்னீசியம் குறைபாட்டை நிவர்த்தி செய்வது, இந்த அறிகுறிகளைக் குறைத்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
கடுமையான மெக்னீசியம் குறைபாடு அரிதானது என்றாலும், பலர் தங்கள் உணவில் போதுமான மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. மெக்னீசியம் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளில் தசைப்பிடிப்பு, சோர்வு, எரிச்சல் மற்றும் தூங்குவதில் சிரமம் ஆகியவை அடங்கும்.
உணவுகளின் மூலம் மெக்னீசியம் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம். மெக்னீசியம் நிறைந்த உணவுகளான கீரை, பச்சை காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள் (பாதாம், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்றவை), பருப்பு வகைகள் (பீன்ஸ் மற்றும் பருப்பு போன்றவை), முழு தானியங்கள் (பழுப்பு அரிசி மற்றும் குயினோவா) மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவை அடங்கும். இந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது இயற்கையாகவே உங்கள் மெக்னீசியம் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் காலப்போக்கில் சிறந்த தூக்கத்தை ஆதரிக்கிறது.
0 Comments:
Post a Comment