உங்களுக்கு மோப்பத் திறன் குறைவதாக உணர்கிறீர்களா..? இது இதய செலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்..! - Agri Info

Adding Green to your Life

July 2, 2024

உங்களுக்கு மோப்பத் திறன் குறைவதாக உணர்கிறீர்களா..? இது இதய செலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

 ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது அடிப்படையில் அவனுடைய உணர்வு சார்ந்த அனுபவங்கள் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக நம்முடைய உடல் மற்றும் மன நலனில் தாக்கத்தை கொண்டுள்ளது. ஆரோக்கியமான மோப்பத்திறன் கொண்ட நபர்களுடன் ஒப்பிடும் பொழுது பாதி அளவு அல்லது கிட்டத்தட்ட மோப்பத்திறன் இல்லாத நபர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் 30 சதவீதம் அதிகமாக இருப்பதாக அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் ஆய்வு மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மோப்பத்திறன் குறைவதற்கும் இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயத்திற்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்வதற்கான முக்கியத்துவம் எழுகிறது. ஒரு நபரின் இதயம் ரத்தத்தை திறம்பட உந்தி தள்ள முடியாத பொழுது, முக்கியமான உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ரத்தம் கிடைக்காமல் போகும் நிலையே இதய செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது.

News18

இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உண்டு. இது ஒரு நபரின் வாழ்க்கை தரத்தை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கிறது. இதய செயலிழப்பு என்பது கொரோனரி இதய நோய், ஹைப்பர் டென்ஷன், கார்டியோ மையோபதி, டயாபடீஸ் மற்றும் பல போன்றவற்றால் தூண்டப்படுகிறது. மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு, சீரற்ற இதயத்துடிப்பு அல்லது தொடர்ச்சியான இருமல் போன்றவை இதய செயலிழப்புக்கான அறிகுறிகளாக அமைகிறது.

இதய செயலிழப்பு மற்றும் மோப்பத்திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு : 

  • மோப்பத்திறன் குறைவது அல்லது முழுவதுமாக இழக்கப்படுவது என்பது இதய செயலிழப்புக்கான ஆரம்பகட்ட அறிகுறியாக திகழ்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலமானது வாசனை அமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இதய செயலிழப்பு என்பது ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் வழங்குதலை குறைப்பதன் மூலமாக மூளையின் வாசனை வழித்தடங்களை தூண்டுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் வாசனை அமைப்பில் உள்ள நியூரான் செயலிழக்கப்படுகிறது. இதன் காரணமாக மோப்ப திறன் பாதிக்கப்படுகிறது.

  • வாசனை அமைப்பு மற்றும் இதயம் ஆகிய இரண்டுமே மைக்ரோவாஸ்குலர் அல்லது ஆரோக்கியமான சிறு சிறு ரத்த நாளங்களை நம்பியுள்ளது. இந்த ரத்த நாளங்களில் காயம் ஏற்படும் பொழுது அது இதய செயலிழப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இந்த நரம்புகள் வாசனை திசுக்களுக்கு ஆதரவு அளிப்பதால் போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காத போது அதனால் வாசனை அமைப்பின் செயல் திறன் பாதிக்கப்படுகிறது.

  • நாள்பட்ட வீக்கம் இதய செயலிழப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இது ஒரு நபரின் வாசனை திசுக்களை பாதித்து அதனால் அவரின் மோப்பத்திறன் குறைகிறது. நாள்பட்ட வீக்கம் மூளையில் உள்ள வாசனை மையங்களை பாதித்து அதனால் மோப்ப திறன் இழப்பு ஏற்படுகிறது.

  • வாசனையை கண்டுபிடிப்பது மற்றும் ரத்த ஓட்டம், ஆக்சிஜன் அளவுகள் போன்றவற்றில் மாற்றங்கள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு ஆல்ஃபேக்டரி மியூகோசா பொறுப்பாகிறது. இதய செயலிழப்பின் போது இது பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒருவரின் மோப்பத்திறன் குறைகிறது.

    • ஆகவே உங்களுடைய மோப்பத்திறனில் ஏதேனும் மாற்றங்களை அனுபவிக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. எனினும் மோப்பத்திறன் குறைந்தாலே அது இதய செயலிழப்பாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பதட்டப்படாமல் அதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மருத்துவர் சந்தியுங்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment