ஒருவர் எத்தனை முறை மலம் கழிக்கிறார் என்பதன் அடிப்படையில் அவருடைய நீண்ட கால ஆரோக்கியம் அமைவதாக சியாட்டிலிலை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஒரு புதிய ஆய்வு மூலமாக தெரிய வந்துள்ளது. மலம் கழிக்கும் வழக்கமானது தனி நபர்களின் நீண்ட கால ஆரோக்கியத்தில் தாக்கத்தை கொண்டுள்ளதாக இன்ஸ்டிட்யூட் ஃபார் சிஸ்டம்ஸ் பயாலஜி நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு ஒருமுறை முதல் இரண்டு முறை வரை மலம் கழிப்பது வழக்கமான ஒன்றாக கருதப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணிகள் ஒரு நாளைக்கு மலம் கழிக்கும் எண்ணிக்கையோடு தொடர்பு கொண்டு உள்ளதாக இந்த ஆய்வு பரிந்துரை செய்கிறது. இந்த ISB ஆய்வு கிட்டத்தட்ட 1400 க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான பெரியவர்களிடம் நடத்தப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற இந்த நபர்களின் மருத்துவ தகவல்கள், வாழ்க்கை முறை மற்றும் பல்வேறு தகவல்கள் கண்காணிக்கப்பட்டது. தனிநபரின் ஆரோக்கியத்தில் அவர் மலம் கழிக்கும் எண்ணிக்கை தாக்கத்தை கொண்டிருப்பதாக இந்த ஆய்வு பரிந்துரை செய்கிறது. இந்த ISB ஆய்வு செல் ரிப்போர்ட்ஸ் மெடிசன் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வின் முன்னணி ஆராய்ச்சியாளரான ஜோஹனஸ் ஜான்சன் மார்டினஸ் அவர்கள் பேசுகையில், “குடல் செயல்பாட்டில் மலம் கழிக்கும் எண்ணிக்கை எவ்வளவு பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது என்பதை இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டியுள்ளன. அதிலும் குறிப்பாக மலம் நீண்ட நாட்களுக்கு குடலில் ஒட்டிக்கொண்டால், நுண்ணுயிரிகள் அவற்றில் கிடைக்கக்கூடிய அனைத்து உணவு நார்ச்சத்தையும் உறிஞ்சி கொண்டு, அவற்றை புளிக்க வைத்து பயனுள்ள குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன” என்று மார்டினஸ் கூறினார்.
குடல் இயக்கங்களை நான்கு வெவ்வேறு பிரிவுகளாக ஆராய்ச்சி குழு வகைப்படுத்தி உள்ளது.
- மலச்சிக்கல் (ஒரு வாரத்திற்கு 1 அல்லது 2 முறை ஏற்படும் குடல் இயக்கங்கள்)
- லோ நார்மல் (ஒரு வாரத்திற்கு 3 முதல் 6 முறை குடல் இயக்கங்கள் ஏற்படுவது)
- ஹை நார்மல் (ஒரு நாளைக்கு 1 முதல் 3 முறை குடல் இயக்கங்கள் ஏற்படுவது) மற்றும்
- வயிற்றுப்போக்கு
எனவே இந்த நான்கு பிரிவுகளில் நீங்கள் மலம் கழிக்கும் எண்ணிக்கை எந்த பிரிவை சேர்ந்தது என்பது நிச்சயமாக உங்களுக்கு தெரியும். ஒருவேளை உங்களுடைய மலம் கழிக்கும் எண்ணிக்கையில் ஏதேனும் பிரச்சனை இருப்பதாக நீங்கள் கருதினால் உடனடியாக மருத்துவரை அணுகி, அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.
0 Comments:
Post a Comment