Search

பால் குடிச்சா எலும்பு வலிமை ஆகாதா..? மருத்துவர் விளக்கம்

 எலும்புகளின் ஆரோக்கியம் என்று சொல்லும் பொழுது நம் ஞாபகத்திற்கு முதலில் வரக்கூடிய உணவு என்றால் அது பால் தான். பல வருடங்களாக பால் குடிப்பது வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு பங்களிக்கும் என்று கருதப்படுகிறது.

ஆனால் டாக்டர் சுசி ஷுல்மன் என்ற வர்ம கலை மருத்துவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து கொண்டு இந்த கருத்து முற்றிலுமாக உண்மை அல்ல என்ற கண்ணோட்டத்தில் பேசுகிறார். எனவே பால் சாப்பிடுவதால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானதாக இருக்கலாம் என்பது அவரது கருத்து. அவர் இப்படி சொல்ல காரணம் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.

பால் உங்களுடைய எலும்புகளை வலிமையாக்குமா? என்ற தலைப்புடன் அவருடைய வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் அந்த வீடியோவில் எலும்புகளின் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கு பால் ஒரு சிறந்த யோசனையாக இருக்காது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.

“பால் என்பது இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது. ஆகவே நாம் நமது உடலில் pH அளவை மீண்டும் சமநிலைப்படுத்த வேண்டும். இதற்கு நமது உடலானது காரத்தன்மை கொண்ட கால்சியம் சத்தை நமது எலும்புகளில் இருந்து எடுத்து இந்த சமநிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது. உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் ஒப்பிடும் பொழுது அமெரிக்காவில் பால் அதிகப்படியாக சாப்பிடப்படுகிறது.

எனினும் அங்கு தான் ஆஸ்டியோபோரோசிஸ் சம்பந்தமான பிரச்சனைகளும் அதிகமாக உள்ளது என்பதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதுமட்டுமல்லாமல் பாஸ்சரைசேஷன் என்ற தொற்று நீக்க செயல்முறையின்பொழுது பால் அதிகப்படியான வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுவதால் அதிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அகற்றப்படுகிறது. இதனால் பால் குடிப்பதற்கான பிரயோஜனம் இல்லாமல் போகிறது.” என்று அந்த வீடியோவில் கூறுகிறார்.

ஆகவே டாக்டர். ஷுல்மன் வழக்கமான பாலுக்கு பதிலாக அதிக கால்சியம் நிறைந்த பிற உணவுகளை பரிந்துரை செய்கிறார். அதில் அரிசி பால் அல்லது பாதாம் பால் போன்றவை அடங்கும்.


பாலுக்கு பதிலாக நீங்கள் எடுத்து கொள்ள வேண்டிய சில கால்சியம் நிறைந்த உணவுகள்:-

- சோயா பால், ஓட்ஸ் பால், பாதாம் பால், அரிசி பால் மற்றும் தேங்காய் பால் போன்ற தாவரம் அடிப்படையிலான பானங்களில் அதிக அளவு கால்சியம் காணப்படுகிறது. எனினும் அரிசி பால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.

- சோயா, தேங்காய், தயிர் மற்றும் சீஸ் போன்ற தாவரம் சார்ந்த ப்ராடக்டுகள்.

- ஓட்ஸ், தானியங்கள் மற்றும் கஞ்சி.

- வெள்ளை அல்லது பழுப்பு நிற மாவில் செய்யப்பட்ட மஃபின் ரோல்கள் மற்றும் பாகெல்கள்.

- பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் டோஃபு.

- வஞ்சரம், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகள்.

- முட்டைகோஸ், கேல், கீரை மற்றும் ப்ராக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகள்.

- சூரியகாந்தி விதைகள், சியா விதைகள், எள் விதைகள், ஹேசல் நட்ஸ் மற்றும் தகிணி போன்ற நட்ஸ் மற்றும் விதைகள்.

- ஆரஞ்சு மற்றும் பப்பாளி பழங்களில் அதிக அளவு கால்சியம் சத்து காணப்படுகிறது.

 பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, உலர்ந்த அத்தி, உலர்ந்த திராட்சை பழங்கள் ஆகியவையும் கால்சியத்தின் சிறந்த மூலங்கள்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment