Search

உங்கள் வயதிற்கு ஏற்ப நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்..? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

 நம்முடைய நாளை உற்சாமாக துவக்கவும், இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும், உடலை எல்லா வகையிலும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் தினசரி இரவு போதுமான நேரம் தூங்குவது எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆனாலும் நம்மில் பலரும் இரவில் போதுமான அளவு தூங்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்கிறோம். இந்த நிலையில் 18 முதல் 60 வயதுடையவர்கள் ஒவ்வொரு நாளும் இரவில் குறைந்தது 7 மணிநேர தூங்குவதை இலக்காக கொள்ள வேண்டும் என ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஒருவருடைய வயதுக்கு ஏற்ப அவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல்களை கீழே பார்க்கலாம்…

News18

ஒருவர் வயதுக்கு ஏற்ப எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்.!!

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூற்றின்படி, வயதுக்கு ஏற்ப தினசரி பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தூக்க நேரம் கணிசமாக வேறுபடுகிறது. CDC பரிந்துரைக்கும் தூக்கம் நேரம் சார்ந்த வழிகாட்டுதல்கள் இங்கே…

  • புதிதாக பிறந்த குழந்தைகள் (0-3 மாதங்கள் வரை): தினசரி 14 முதல் 17 மணி நேரம் தூக்கம் தேவை

  • பிறந்நது 4-12 மாதங்கள் வரையிலான கைக்குழந்தைகள்: தினசரி 12 முதல் 16 மணி நேரம் தூக்கம் தேவை

  • 1 வயது முதல் 2 வயது வரையிலான சிறு குழந்தைகள்: தினசரி 11 முதல் 14 மணி நேரம் தூக்கம் தேவை

  • 3 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள்: தினசரி 10 முதல் 13 மணி நேரம் தூக்கம் தேவை

  • 6 வயது முதல் 12 வயது வரையிலான பள்ளி செல்லும் குழந்தைகள்: தினசரி 9 முதல் 12 மணி நேரம் தூக்கம் தேவை

  • 13 முதல் 17 வயது வரையிலான டீனேஜர்கள்: தினசரி 8 முதல் 10 மணி நேரம் தூக்கம் தேவை

  • 18 முதல் 60 வயது வரையிலான பெரியவர்கள்: தினசரி 7 மணிநேரம் அல்லது அதற்கு மேல்

  • 61 முதல் 64 வயது வரையிலான வயது முதிர்ந்தவர்கள்: தினசரி 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் தேவை

  • 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள்: தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் தேவை

    எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் வயது முக்கியப் பங்கு வகிக்கும் அதே நேரம், உங்கள் உடல் சரியாகச் செயல்படுவதற்கு நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய மணிநேரங்களின் எண்ணிக்கையை சில காரணிகள் பாதிக்கலாம். அவை கீழே…

    • அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள் அல்லது குறுக்கீடுகள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம்

    • உங்களுக்கு ஏற்கனவே தூக்கமின்மை பிரச்னை இருந்தால், உங்கள் உடல் அதிக தூக்கத்தை கேட்கும்

    • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் அசௌகரியம் தூக்கத்தை மோசமாக பாதிக்கும்.

    • வயதானவர்களின் தூக்க முறை மாறுகிறது. இளம் வயதினரைப் போலவே அதே அளவு தூக்கம் முதியவர்களுக்கு தேவைப்பட்டாலும், வயதானவர்கள் மிக குறைவாக தூங்குகிறார்கள், அதே போல தூங்குவதற்கும் அதிக நேரம் எடுத்து கொள்கிறார்கள். சிரமப்பட்டு தூங்கினாலும் இரவில் பல முறை எழுந்திருக்கிறார்கள்.

    சிறந்த தூக்கத்தினால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்…

    • போதுமான தூக்கம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று மற்றும் நோய்களை எதிர்த்து போராட நமக்கு உதவுகிறது.

    • சரியாக தூங்காமல் இருப்பது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை பாதிக்கிறது, இது அதீத எடை அதிகரிப்பு அல்லது மோசமான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. அதே நேரம் போதுமான தூக்கம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.

    • தூக்கம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த, மன அழுத்த ஹார்மோன்களின் அளவை குறைக்கவும் உதவி மனநலனை மேம்படுத்துகிறது.

    • ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல் மற்றும் இதய செயல்பாடு உள்ளிட்டவற்றை சிறப்பாக பராமரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி போதுமான அளவு தூங்குவது டைப் 2 நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட நிலைகள் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.

      • உங்கள் உடலுக்கு போதுமான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்வது சாலையில் நீங்கள் வாகனத்தை இயக்கி செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

      • கவனிக்கும் திறன், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் உள்ளிட்ட அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த போதுமான தூக்கம் உதவுகிறது.

0 Comments:

Post a Comment