பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 1 லட்சத்து 98 ஆயிரத்து853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். இதனை பிரத்யேக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தரவரிசை பட்டியல் வெளியீட்டின்போது, உத்தேச கலந்தாய்வு தேதி, கலந்தாய்வில் பங்கேற்கும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை. கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் இடங்களின் உத்தேச எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment