அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட "தமிழ் புதல்வன்" எனும் மாபெரும் திட்டம் இந்த நிதியாண்டு முதல் அமல்படுத்திடும் வகையில் 09.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 09.08.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெறும் "தமிழ்புதல்வன்" திட்ட துவக்க விழா நிகழ்ச்சியை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக காணும் வகையில் பள்ளிகளில் தக்க ஏற்பாடுகளை செய்யும் படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. துவக்க விழா நிகழ்ச்சிகளை காணொலியில் காண்பதற்கான லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், துவக்க விழா நிகழ்ச்சியை கண்டு களித்த அறிக்கையை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களின் பள்ளியில் இந்நிகழ்ச்சியை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Form-இல் 09.08.2024 அன்று நண்பகலில் தவறாது உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காணொலிக்கான Link: https://youtu.be/Zgbw9Sht4us
Google Form-க்கான Link: https://forms.gle/ToJ2eqXRdtAXriHx5
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment