Search

களஞ்சியம் செயலி மூலம் விடுப்பு விண்ணப்பித்தல் - மாவட்டக் கருவூலரின் கடிதம் ( 09.08.2024 )

 

 IMG_20240809_204625

கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் அவர்களின் காணொளிக் காட்சி கூட்டம் 09.08.2024 ஆம் நாளன்று நடைப்பெற்றது. 


கீழ்கண்ட விவரங்கள் மற்றும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 1.களஞ்சியம் செயலி ( KALANJIYAM MOBILE APP ) அனைத்து அரசு பணியாளர்களும் தங்களின் மொபைலில் களஞ்சியம் செயலியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்து அதில் உள்ள 

1 ) Profile , 2 ) Leave , 3 ) Payslip , 4 ) Report ... etc போன்ற விவரங்களை சரி பார்த்துக்கொள்ளவும் , மேலும் இனிவருங்காலங்களில் விடுப்பு எடுப்பவர்கள் களஞ்சியம் மொபைல் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் தற்செயல் விடுப்பு , ஈடுசெய்யும் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்புகளை தவிர மற்றும் ஏனைய விடுப்புகளை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் அனுமதி ஆணைப் பெற்று அவ்வாணையை மொபைல் செயலியில் ஏற்பளிப்பு செய்த பிறகுதாள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


முன்பணங்கள் சம்பந்தமாக அதாவது பண்டிகை முன்பணம் , குறுகிய கால முன்பணம் போன்ற முன்பணம் விண்ணப்பங்கள் களஞ்சியம் மொபைல் செயலியின் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும். எனவே முழுமையாக களஞ்சியம் மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் தென்படின் குறைகளை களைய Feedback Report அனுப்ப வேண்டும் மற்றும் ஏற்கனவே எடுத்த விடுப்புகளை Navigation Path ( HR - Report View - Employee List view Details ) பயன்படுத்தி Web id- யில் பதிவிட்டு ஏற்பளிக்க வேண்டும் அப்போதுதான் விடுப்பு விவரங்கள் முழுமையாக பதியப்படும்

களஞ்சியம் செயலி மூலம் விடுப்பு விண்ணப்பித்தல் - திண்டுக்கல் மாவட்டக் கருவூலரின் கடிதம்!

DGL Treasury Officer Letter👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment