சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

August 20, 2024

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள தரவு உள்ளீட்டாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Assistant Cum Data Entry Operator 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Office Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thanjavur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, எல்.ஐ.சி பில்டிங் அருகில், தஞ்சாவூர் - 613001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://thanjavur.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment