Search

கை, கால்களில் எறும்பு ஊர்வது போன்ற உணர்வு அடிக்கடி வருதா..? இந்த குறைபாடாக இருக்கலாம்!

 பொட்டாசியம் உடலுக்கு மிக முக்கியமான தாது மற்றும் எலக்ட்ரோலைட் ஆகும். இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, செல்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, தசை மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. பொட்டாசியம் அளவு குறைந்தால் மரணம் கூட ஏற்படலாம்

ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு 3.5 mmol-ல் இருந்து குறையும் போது, ​​உடலில் பொட்டாசியம் குறைபாடு இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவத்தில், இது ஹைபோகாலேமியா என்று அழைக்கப்படுகிறது. குறைந்த பொட்டாசியம் என்பது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 4700 மில்லிகிராம் பொட்டாசியம் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொட்டாசியம் உடலுக்கு மிக முக்கியமான தாது மற்றும் எலக்ட்ரோலைட் ஆகும். இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, செல்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, தசை மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. பொட்டாசியம் அளவு குறைந்தால் மரணம் கூட ஏற்படலாம்

News18

பொட்டாசியம் நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது. பொட்டாசியம் நேரடியாக கொலஸ்ட்ராலைக் குறைக்கவில்லை என்றாலும், கொழுப்பைக் குறைக்கும் உணவுகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதன் விளைவாக, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்தால், சிகிச்சையுடன் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு போதுமான பொட்டாசியம் உட்கொள்ளல் அவசியம் ஆகும்.

பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தால், எப்போதும் சோர்வாக உணர்வார். தசைச் சுருக்கத்திற்கு இதுவே காரணமாக இருக்கிறது. எனவே, பொட்டாசியம் குறையும் போது, ​​தசைகள் பலவீனமடைகின்றன. பொட்டாசியம் குறைவதால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. செரிமான பிரச்சனைகளும் ஏற்படும். இதயத்துடிப்பு சில சமயம் அதிகரிக்கும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். கைகளும் கால்களும் அடிக்கடி நடுங்க ஆரம்பிக்கும். மலச்சிக்கல் ஏற்படலாம்.

எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்…

  • வாழைப்பழம் - தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் பொட்டாசியம் குறைபாட்டைப் போக்கலாம். நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 400 முதல் 450 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது

  • இளநீர் - இது நீரழிவைத் தடுக்கிறது. இதில் செல்களுக்கு தண்ணீரைக் கடத்தும் எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டுள்ளது. இளநீரில் உள்ள இயற்கை சர்க்கரைகள் உடற்பயிற்சியின் போது ஆற்றலை வழங்குகின்றன. 1 கப் அல்லது 240 மில்லி இளநீரில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 13 சதவீதம் உள்ளது.

  • பீன்ஸ் - வாழைப்பழத்தை விட பீன்ஸில் அதிக பொட்டாசியம் உள்ளது. 1 கப் அல்லது 179 கிராம் பீன்ஸில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 21 சதவீதம் உள்ளது. கருப்பு பீன்ஸில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 13 சதவீதம் உள்ளது

  • ஆரஞ்சு பழம்- இது பொட்டாசியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் 230 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

  • தர்பூசணி - 2 துண்டுகள் அல்லது 572 கிராம் தர்பூசணியில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 14 சதவீதம் உள்ளது.

  • கீரை - 3 கப் அல்லது 90 கிராம் கீரையில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 11 சதவீதம் உள்ளது. கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் மாக்னீசியம் நிறைந்துள்ளது.

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1 கப் அல்லது 328 கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 16 சதவீதம் உள்ளது.

  • அவகோடா - ஒரு நடுத்தர அளவிலான அவகோடா பழத்தில் சுமார் 700 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

  • உருளைக்கிழங்கு - ஒரு நடுத்தர அளவிலான வேகவைத்த உருளைக்கிழங்கில் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 12 சதவீதம் உள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment