Search

உங்கள் குழந்தையின் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டைக் தெரியப்படுத்தும் 5 முக்கிய அறிகுறிகள்

 எலும்புகள், தோல், தசைகள் மற்றும் நரம்புகள் உட்பட நம்முடைய உடலின் பல்வேறு பாகங்களின் சரியான செயல்பாட்டை பராமரிக்க ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன. வைட்டமின் டி, துத்தநாகம், இரும்பு, கால்சியம் மற்றும் மாக்னீசியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் உடலுக்கு போதுமான அளவு கிடைக்காதபோது, ​​குழந்தைகளுக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் உருவாகலாம்.

உடலால் இந்த சத்துக்களை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தையின் டயட்டில் சேர்க்க வேண்டியது அவசியம் ஆகும். சிறிய அளவில் தேவைப்பட்டாலும், வைட்டமின் டி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. அதனால்தான் அவை நுண்ணூட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

News18

குழந்தைகளின் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணம் என்னவாக இருக்கும்?

“கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடாதது போன்ற பல்வேறு காரணங்கள் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இவை பெரும்பாலும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். குழந்தை பருவத்தில் மோசமான உணவுப்பழக்கம் இருப்பதால் ஆரோக்கியமான மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு உணவுகள் சாப்பிடுவதை புறக்கணிக்கிறார்கள். ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று போன்ற சில நோய்களும் கூட குழந்தைகளுக்கு பசியின்மையை ஏற்படுத்தும் என டாக்டர். பிரசாந்த் மோரல்வார் கூறுகிறார்.


இதன் அறிகுறிகள் : 

  • உடலில் ஆற்றல் குறைவாக இருப்பது

  • எப்போதும் கோபத்தில் சண்டை போடுவது, எதையாவது தூக்கி எறிவது அல்லது வெறித்தனமாக நடந்துகொள்வது

  • பசியின்மை அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சாப்பிட்டவுடன் உடனடியாக தூக்கி எறிதல்

  • ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் பருமனாக இருந்தால், எப்போதும் பசியுடன் இருப்பது போன்றும், எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியடையாத உணர்வும் உருவாக்கும்.

  • உலர்ந்த மற்றும் எளிதில் உதிரும் முடி

  • காயங்கள் அல்லது வடுக்கள் மெதுவாக குணமாகும்

  • ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்

குழந்தைகளில் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை நிர்வகிப்பதற்கான சில டிப்ஸ் :

புரதம், இரும்பு, வைட்டமின் டி, துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவையே மிகவும் பொதுவான குறைபாடுகள் ஆகும். ஆப்பிள்கள், பேரிக்காய் மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. இவை தசைகளை உருவாக்குவதற்கு அவசியமானதோடு மலச்சிக்கல் அல்லது வாயு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றன.

முட்டை, பால் பொருட்கள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குழந்தைகளின் புரதக் குறைபாட்டின் பிரச்சனையை பராமரிக்க உதவும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் டி போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் கீரை, கொண்டைக்கடலை, ஆளிவிதை, சோயாபீன்ஸ் மற்றும் தர்பூசணி போன்ற உணவுகளில் எளிதாகக் காணப்படுகின்றன. துத்தநாகம் மற்றும் கால்சியம் குறைபாடு உள்ள குழந்தைகள் பால், பனீர், மோர் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை அதிகம் சாப்பிட முயற்சிக்க வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment