Search

அதிகமாக காஃபி குடித்தால் கல்லீரல் பாதிக்கப்படுமா..? உண்மை இதுதான்..!

 பலரின் தினசரி வழக்கமாக காலை நேரத்தில் காஃபி பருகுவது இருக்கிறது. உங்களுக்கும் காலை எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, சுமார் 60% மக்கள் தினமும் காஃபி குடிக்கிறார்கள்.

பலரும் காஃபியை தங்களுக்கு பிடித்த பானமாக வைத்திருப்பதற்கு பின்னால் உள்ள ரகசியம் காஃபின் ஆகும். காஃபினானது மூளையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்க செய்கிறது மற்றும் சோர்வை குறைக்கிறது. காஃபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, இது செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை நடுநிலையாக்குவதன் மூலம் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல்ஸ் இருந்தால் அது முன்கூட்டியே முதுமை மற்றும் கேன்சர், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு அபாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

News18

அதே போல காஃபி செரிமானத்திற்கு உதவுகிறது, மேலும் இரைப்பை குடல் அமைப்பு மூலம் உணவின் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது. சிலர் காலை காஃபி குடித்த சிறிது நேரத்திலேயே மலம் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதலை அனுபவிப்பது இதற்கு உதாரணம். அதே நேரம் காஃபி நம் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாருங்கள்..

உங்கள் கல்லீரலுக்கு காஃபி ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியமற்றதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் நம் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளில் மிக முக்கிய உறுப்பாக கருதப்படும் கல்லீரல், நம் உடலை சீராக இயங்க வைக்கும் சுமார் 500 வெவ்வேறு செயல்பாடுகளை செய்கிறது. கல்லீரலானது நாம் எடுத்து கொள்ளும் உணவில் இருக்கும் புரதங்கள், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புகளை ஆற்றலாக மாற்றுகிறது. மேலும் உடல் செயல்பாடுகளுக்கு தேவையான புரதங்கள் மற்றும் கெமிக்கல்களை உற்பத்தி செய்கிறது. சிறந்த செரிமானத்திற்கு உதவுவது முதல் ரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி நீக்குவது வரை கல்லீரலின் பங்கு மிக முக்கியமானது.

எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பது இன்றியமையாதது. அதிர்ஷ்டவசமாக காஃபியானது கல்லீரல் ஆரோக்கியத்திற்கான பானமாக உள்ளது. பொதுவாக காஃபி எனர்ஜியை பூஸ்ட் செய்ய உதவுவதாக அறியப்பட்டாலும், கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கும் காஃபி பங்களிக்க கூடும்.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு காஃபி நன்மை அளிக்கும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன…

  • காஃபியில் குளோரோஜெனிக் ஆசிட் (CGA) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன, இவை கல்லீரலில் குளுக்கோஸை ப்ராசஸ்-ஆக உதவுகிறது மற்றும் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

  • தினசரி காஃபி குடிக்கும் பழக்கம் உடலில் அழற்சி குறைவதோடு தொடர்புடையது. அழகேசி மற்றும் வீக்கம் குறைவாக இருப்பது சில கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாப்பை தரலாம்.

  • காஃபியானது Autophagy-ஐ தூண்டுவதாக கூறப்படுகிறது. இது சேதமடைந்த செல் காம்போனென்ட்ஸ்களை அகற்றும் ஒரு ப்ராசஸ் ஆகும். இது கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மற்றும் இந்த உள்ளுறுப்பு திறம்பட செயல்பட உதவுகிறது.

    எனவே தினசரி காஃபி குடித்தாலும் மிதமான நுகர்வு உங்கள் கல்லீரலுக்கு நன்மை பயக்கும். மேலும் நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். காஃபியானது “கல்லீரல் ஆரோக்கியத்திற்கான மேஜிக்கல் பீன்” என குறிப்பிடப்படுகிறது. வழக்கமான அடிப்படையிலான காஃபி நுகர்வு பழக்கம் கல்லீரல் நொதிகளின் அளவு குறைய உதவுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment