புரோட்டீன் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முட்டை தான், ஆம், இது ப்ரோட்டீனின் நல்ல மூலமாகும். ஆனால் முட்டை மட்டுமில்லை, விலங்கு மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகள் உட்பட பல்வேறு உணவுகளில் புரோட்டீன் காணப்படுகிறது.
விலங்கு அடிப்படையிலான புரோட்டீன் மற்றும் தாவர அடிப்படையிலான புரோட்டீன் இடையேயான விவாதம் இன்றுவரை தொடர்கிறது. உடலின் முழு இயக்கத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக புரோட்டீன் உள்ளது. தசைகள், ஹார்மோன்கள், எலும்புகள் மற்றும் ரத்தத்திற்கான கட்டுமானத்தை உருவாக்க புரோட்டீன் உதவுகிறது. எனவே புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
விலங்கு மற்றும் தாவரங்களில் இருந்து இரண்டு வகையான புரோட்டீன்கள் கிடைக்கின்றன. இவை இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என என்றாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?. விலங்கு மற்றும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் ப்ரோட்டீனுக்கு இடையேயுள்ள வித்தியாசங்கள் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
உங்களுக்கு ஏன் புரோட்டீன் தேவைப்படுகிறது?
திசுக்கள், தசைகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் கட்டமைப்புக்கு புரோட்டீன் இன்றியமையாத ஒரு தேவையாக உள்ளது. மேலும், ஹார்மோன் சமநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாட்டுக்கும் புரோட்டீன் அவசியமாக உள்ளது. உடலுக்கு தேவையான புரோட்டீன் இல்லையென்றால், தசை பலவீனம், சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தியில் பலவீனம் மற்றும் காயம் குணமடைவதில் தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். இவை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமொனால் போதிய அளவு புரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் படி, புரோட்டீன்க்கான ரெகமன்டேட் டைடெரி அல்லோவேன்ஸ் படி (RDA) ஒரு கிலோ உடல் எடையில் 0.8 கிராம் புரோட்டீன் இருக்கும்.
விலங்கு ப்ரோட்டீனின் நன்மைகள்…
லீன் மீட்ஸ், மீன், முட்டை மற்றும் பால் உணவுகள் போன்ற விலங்கு சார்ந்த புரோட்டீன் மூலங்கள், தாவர அடிப்படையிலான புரோட்டீன் மூலங்களுடன் ஒப்பிடும்போது முழுமையான ப்ரோட்டீனின் நல்ல ஆதாரங்கள் இருக்கின்றன என்று மருத்துவர் டாக்டர் மணீஷ் இடோலிகர் கூறியுள்ளார். தாவரங்களில் உள்ள ப்ரோட்டீனை விட விங்குகளிடம் இருந்து கிடைக்கும் ப்ரோட்டீனை நமது உடலால் எளிதில் உறிஞ்சிக்கொள்ள முடியும்.
விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் ப்ரோட்டீனில் காணப்படும் 9 அத்தியாவசிய அமினோ ஆசிட்கள், அதனை ஒரு ‘முழுமையான’ ப்ரோட்டீனாக உருவாக்குகிறது மற்றும் தசைகள் மற்றும் எலும்புகளை உருவாக்க உடலுக்கு உதவுகிறது. கூடுதலாக, விலங்கு புரோட்டீன்களில் வைட்டமின் பி 12, அயன், ஜின்க் மற்றும் ஒமேகா -3 ஃபாட்டி ஆசிட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை மூளை ஆரோக்கியம், ரத்த சிவப்பணு உற்பத்தி, நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்கின்றன.
தாவர ப்ரோட்டீனின் நன்மைகள்?
பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு, தானியங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற தாவர அடிப்படையிலான புரோட்டீன்களில் பெரும்பாலும் நார்ச்சத்து நிறைந்தவை, இது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தாவரங்களில் இருந்து கிடைக்கும் ப்ரோட்டீனில் குறைவான அளவிலான அமினோ ஆசிட்களே உள்ளன. இது குறித்து டாக்டர் இடோலிகர் கூறியதாவது, “விலங்கு புரோட்டீன் மூலங்களுடன் ஒப்பிடும்போது தாவர புரோட்டீன்கள் பொதுவாக நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ராலில் குறைவாக உள்ளன, அவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன என்று கூறியுள்ளார். கூடுதலாக, தாவர புரோட்டீன்களில் வைட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் உட்பட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் நன்மையளிக்கும்.
எந்த புரோட்டீன் சிறந்தது..?
இறைச்சி, பால் மற்றும் முட்டைகளில் காணப்படும் விலங்கு ப்ரோட்டீனில், அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி 12 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இது பெரும்பாலும் முழுமையான ப்ரோட்டீனாக கருதப்படுகிறது. இருப்பினும், இது அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது இதய பிரச்சினைகளுக்கு பங்களிக்கிறது.
பருப்பு வகைகள், தானியங்கள், நட்ஸ் மற்றும் விதைகளில், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. தாவர அடிப்படையிலான உணவுகள் இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைந்த அளவு குறைக்கிறது. ஆனால் ஒவ்வொரு வித தாவர புரதங்களிலும் வெவ்வேறு வகையான மிகக் குறைந்த அளவிலான புரோட்டீன்கள் கிடைக்கும். இதற்காக நிறைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது புரோட்டீன் சத்து குறைபாடு மட்டுமின்றி மற்ற பிற ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். ஆனால் விலங்கு புரோட்டீன்கள் குறைவாக எடுத்தாலே அதிக புரோட்டீன் கிடைக்கும். அதனால் அளவோடு எடுத்துக் கொண்டு மற்ற ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. இரண்டு வகையான புரோட்டீன்களையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கும், உங்கள் தினசரி புரோட்டீன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இதுவே சிறந்த வழியாகும்.
No comments:
Post a Comment