திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்முகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
திருச்சி நகரில் அமைந்துள்ள திருவானைக்காவல் ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு காலிப்பணியிடங்கள் 1 ஆகும். இதற்கு கல்வித் தகுதி: 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 01.07.2024ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்த பணிக்கு சம்பளம் 10,700 முதல் 33,700 வரை ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.09.2024 மாலை 05.45 மணி வரை ஆகும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment