Search

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறீர்களா..? இனியும் செய்ய வேண்டாம்.. நிபுணர்கள் கூறும் காரணம்!

 உணர்ச்சியை கட்டுப்படுத்துவது உடல் நலனிற்கு தீங்கு விளவைுக்கும் என்றும், உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க தினமும் கடைப்பிடிக்க வேண்டியது என்ன என்பதையும் இங்கே பார்க்கலாம்.

மனிதனுடன் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஒட்டிப் பிறந்த ஓர் உன்னத சக்தி உணர்ச்சி. அப்படிப்பட்ட உணர்ச்சியை தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதன் மூலம் ஒருவரது உடலில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

உணர்ச்சிகள் தான் ஒருவரை மனிதனாக உணர வைக்கிறது. வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில் நாம் மகிழ்ச்சி, சோகம், கோபம், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிகள வெளிப்படுத்தி வருகிறோம். ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்வது போல மனதை கட்டுக்கோப்பாக வைக்க உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்வதும் அவசியம்.

ஆர்ப்பாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த பரபரப்பான உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதாக தங்கள் உடல்நலனையும், மன நலனையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் தனது சோகத்தையோ, கோபத்தையோ, வருத்தத்தையோ தனக்குள் அடக்கி வைப்பதன் மூலம் அவரது உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட மாட்டாது. மாறாக அந்த உணர்ச்சிகள் அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்களுக்கே அறியாமல் பாதிக்கத் தொடங்கும். நமது உடலுக்கும், மனதிற்குமான தொடர்பு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது உடல் அளவில் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

News18

இவ்வாறாக அடக்கப்படும் உணர்வுகள் ஒருவரது தன்னம்பிக்கையை குறைத்து அவரது முயற்சியில் இருந்து பின்வாங்க வைக்கிறது. மேலும் பிரச்சனைகளை நேருக்கு நேர் கையாள்வதிலும் பயத்தை உண்டாக்குகிறது.

ஒருவருக்கு கடந்த காலத்தில் மனதளவில் ஏற்பட்ட அதிர்ச்சியோ, ஒருவரது எதிர்பார்ப்போ ஒருவரை உடலளவில் பாதித்திருக்கலாம். அதில் இருந்து வெளியேறாமல் அதனுள் மூழ்கி தன்னை கட்டுப்படுத்தும் பட்சத்தில் அவற்றை வெளியேற்றி விட முடியாது. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கச் செய்து உருக்குலைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உணர்ச்சிகளை ஏன் அடக்கக்கூடாது?
ஒருவர் உணர்ச்சிகளை அடக்குவதன் மூலம் நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியாது என உடல்நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடல் அதன் உணர்ச்சியை அவ்வப்போது வெளிப்படுத்துவது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் உடலில் இருக்கும் அனுதாப நரம்பு மண்டலத்தை ஃபைட் டூ பிளைட் என்றே அழைக்கிறார்கள். உணர்ச்சிகளை அவ்வப்போது வெளிப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்வதே இதன் பொருள். ஆனால் இதற்கு மாறாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நம்மை அதே மனநிலையில் வைப்பதுடன் உடல்ரீதியான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

இந்த நாள்பட்ட செயல்பாடுகள் கார்டிசோல் போன்ற மனஅழுத்த ஹார்மோன்களை உருவாக்குகிறது. இந்த ஹார்மோன்கள் நம் உடலை சோர்வடையச் செய்கிறது. கார்டிசோல் அளவு அதிகமாகும் பட்சத்தில் உடல் வீக்கத்திற்கு வழிவகுத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் அது பலவீனப்படுத்தலாம். மேலும் உடலின் மற்ற ஹார்மோன்களின் சமநிலையையும் அது பாதிக்கிறது.

கார்டிசோலின் அளவு அதிகமாகும் பட்சத்தில் அது தைராய்டை உருவாக்கும் ஹார்மோனையும் அதிகரிக்க வைத்து, உடலில் தைராய்டு நோய் வர வழிவகை செய்கிறது. இதன்மூலம் உடல் சோர்வு, மனசோர்வு, உடல் எடை அதிகரித்தல், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். அதுமட்டுமின்றி இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலத்தையும் இது பாதிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உணர்ச்சிளை நிர்வகிப்பது எப்படி?


  1. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக தினந்தோறும் அவற்றை கட்டுக்கோப்பாக வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

  2. தங்களுக்கு விருப்பப்பட்டவர்களிடம் அன்றாடம் என்ன நடக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளலாம்.

  3. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், நிபுணர்களை சந்தித்து அவர்களது அறிவுரைகளை கடைப்பிடிப்பிடித்துக் கொள்ளலாம்.

  4. ஒருவேளை தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத பட்சத்தில், உங்களது மன குமுறல்களை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி கிழித்து எறியலாம் அல்லது ஆடியோவாக பேசி அதை அழிக்கலாம்.

  5. ஜார்னலிங், சவுண்ட் ஹீலிங் அல்லது எமோஷனல் ஃப்ரீடம் டெக்னிக்ஸ் (EFT) மூலம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் வெளியேற்றுவதன் மூலம் நம் உடலில் உள்ள எதிர்மறை எண்ணங்களை வெளியேற வழி செய்யலாம்.

  6. யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளின் மூலமும் நம் உடலை பேணிக் காக்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment