Search

எந்த பழத்தில் அதிக 'கால்சியம்' சத்து உள்ளது..? சரியான பதிலை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..!

 

பொது அறிவு என்பது ஒவ்வொரு கணமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவும் அறிவுக் களஞ்சியமாகும். ஒவ்வொரு மாணவரும் பொது அறிவை பயிற்சி செய்வதால் அவர்களது அன்றாட வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஏனெனில் பொது அறிவின் களஞ்சியத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அறியப்படாத தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், பொது அறிவில் பயிற்சி பெறுவது அவசியமாகும். இன்று உங்களுடன் சில பொது அறிவு கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிகிறத எனப் பாருங்கள்.

கேள்வி- பலாப்பழம் எந்த நாட்டின் தேசியப் பழம்?

பதில்- இலங்கை மற்றும் பங்களாதேஷின் தேசியப் பழமாக பலாப்பழம் உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மாநிலப் பழமாகவும் பலாப்பழம் உள்ளது. இந்த பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு சிறப்பானது. கோடைகால பழமான இதற்கு இந்தியாவில் மதிப்பு ஜாஸ்தி. அதுவும் குறிப்பாக வங்காள மக்களுக்கு கோடைகால மாம்பழம் மற்றும் பலாப்பழத்தின் மதிப்பு கொஞ்சம் வித்தியாசமானது.

கேள்வி – இந்தியாவில் அதிகம் சாப்பிடப்படும் பழம் எது?

பதில் – வாழைப்பழம். இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வாழைப்பழம் ஒன்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த பற்றாக்குறையை போக்கலாம். அதோடு வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஃப்ரீ ரேடிக்கல்களால் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும், இதில் உள்ள டோபமைன் நம் மனநிலையை சந்தோஷமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கேள்வி - எந்த பழத்தில் அதிக கால்சியம் உள்ளது?

பதில் -

  • கால்சியம் நிறைந்த பழங்களின் பட்டியலில் ஆரஞ்சு முதலிடத்தில் உள்ளது. அதேப்போல் டேன்ஜரின் பழத்திலும் அதிக கால்சியம் சத்து உள்ளது.

  • மேலும் கால்சியம் நிறைந்த பழங்களில் ஒன்றாக கிவி உள்ளது. 1 கப் (177 கிராம்) கிவி பழத்தில் 60 மி.கி கால்சியம் உள்ளது.

  • கிவி பழத்தில் அதிகளவு கால்சியம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் சி அளவில் 230 சதவிகிதம் கிவி பழத்தில் உள்ளது.

  • இது தவிர, 100 கிராம் டேன்ஜரின் பழத்தில் 37 மில்லிகிராம் கால்சியம் கால்சியம் உள்ளது. 100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 43 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இவையெல்லாம் கால்சியம் நிறைந்த பழங்களில் ஒன்றாகும்.

    கேள்வி: எந்த காய்கறியில் அதிக வைட்டமின்கள் உள்ளன?

    பதில்: கீரை. இதுவொரு பச்சை காய்கறி ஆகும். இந்தியாவின் அனைத்து பகுதி மக்களாலும் கீரைகள் உட்கொள்ளப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ளது. மேலும் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமுள்ளதால், அசைவம் மற்றும் பால் பொருட்கள் அல்லாத டயட்டில் இதை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

    கேள்வி - எந்த நாடு அதிகமாக அபின் உற்பத்தி செய்கிறது?

    பதில் - ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தி செய்யும் நாடாக மியான்மர் மாறியுள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 1080 மெட்ரிக் டன் அபின் மியான்மர் நாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    கேள்வி - நாட்டிலேயே அதிக உப்பை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

    பதில் – குஜராத். இந்தியாவிலேயே அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலமாகவும், உலகில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் இது திகழ்கிறது. குஜராத்தில் உள்ள காரகோடா, பாவ்நகர், போர்பந்தர் மற்றும் ரான் ஆஃப் கட்ச் ஆகியவை உப்பு உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். குஜராத்திற்கு அடுத்தபடியாக அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலமாக இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

    கேள்வி - இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?

    பதில் – யானை. இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக 2010-ம் ஆண்டு யானை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 –ம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
    பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் சில பொதுவான அறிவு மற்றும் அன்றாட வாழ்க்கைத் தகவல்களைப் பகிர்ந்துள்ளோம். உங்கள் உடல்நலத்திற்காக யோகா பயிற்சி குறித்தோ அல்லது மருத்துவ தகவல்கள் ஏதாவது இந்தக் கட்டுரையில் படித்திருந்தால், அதில் ஈடுபடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment