அதிக எடையுடன் இருப்பது நீரிழிவு நோயின் வாய்ப்பை அதிகரிக்கிறது. எடை மற்றும் டைப் 2 நீரிழிவு (T2DM) ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மிகவும் வலுவானது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையைக் குறைப்பதனால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இது நீரிழிவு நோயின் தொடக்கத்தை தாமதப்படுத்துகிறது. இதில் முக்கியப் பங்கு வகிக்கும் இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் சுரப்பி ஆகும்.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது சீரான உடலியல் செயல்பாடுகளை பாதிக்கிறது. மறைமுகமாக, எடையை நிர்வகிக்கிறது. இது நேரடியாக எடை இழப்பை ஏற்படுத்தாது என்றாலும், உடல் சர்க்கரையை எவ்வாறு கையாளுகிறது, கொழுப்பைச் சேமிக்கிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது என்பதை இன்சுலின் நிர்வகிக்கிறது.
இன்சுலினுக்கும் கொழுப்புக்கும் என்னத் தொடர்பு?
உடல் எடை அதிகரிக்கும் போது, கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளைச் சுற்றி கொழுப்பை உருவாகிறது. இது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. உடலில் அதிக அளவு இன்சுலின் இருந்தால் உடல் எடை கூடும். ரத்தத்தில் உயர் சர்க்கரை அளவு முக்கியமாக இன்சுலின் அளவை அதிகரிக்கும். இதற்கு காரணமாக பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கின்றன. செல்கள் இன்சுலினுக்கு ஆற்றல் வழங்காதபோது, அது “இன்சுலின் எதிர்ப்பிற்கு” வழிவகுக்கிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க இன்சுலின் சரியான அளவில் இருப்பது முக்கியம்.
நீண்ட காலமாக இன்சுலினை சரியான திசையில் நிர்வாகம் செய்ய , நோயாளிகளுக்கு பிற உடல்நலம் மற்றும் உணவு மாற்றங்கள் தேவைப்படுகிறது. இதற்கு முதற்படியாக சர்க்கரையை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைத்து, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை அதிகம் சேர்ப்பது சிறந்த முறையாக பின்பற்றப்படுகிறது. சில வைட்டமின்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு சப்ளிமெண்ட்ஸ் உதவலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம். மெக்னீசியம், சிங்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சில ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் குறைபாடுடையவையாக பார்க்கப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸ் தவிர, சில நவீன சிகிச்சைகள் நீரிழிவு நோய்க்கு சிறந்தத் தீர்வாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, IV வைட்டமின் சிகிச்சையானது அதிக அளவு வைட்டமின்களை உடலுக்கு வழங்குகிறது. இது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், இது ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்பட வேண்டும்.
நீரிழிவு நோய் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதால், சில எளிதான வாழ்க்கை முறை மாற்றங்கள் நம்மைப் பாதுகாக்கும் என்பதை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இறுதியாக, ஒவ்வொருவருக்கும் அவரவர் மருத்துவ வரலாறு மற்றும் மரபணு காரணங்கள் உள்ளன. உங்கள் உடல்நலம் குறித்த முழுமையான மதிப்பீட்டை அறிய மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
No comments:
Post a Comment