Search

உங்க உடல் எடையை அதிகரிக்கக் கூடிய காய்கறிகள் என்னென்ன தெரியுமா..?

 பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் பல்வேறு வினாடி வினாக்கள் மற்றும் புதிர்களை பயிற்சி செய்து பார்ப்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கமான GK புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை படிப்பது தவிர, ஒரு சில வினாடி வினாக்களில் பங்கு பெறுவது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு பொது அறிவை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

ஆகவே இந்த பதிவில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு சில பொது அறிவு கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை தெரிந்து கொள்ளலாம்.

News18

எந்த உப்பு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது?

சுகாதார நிபுணர்களின் படி, குறைந்த சோடியம் கொண்ட உப்பு அதிக பயனுள்ளதாக கருதப்படுகிறது. கடல் மற்றும் கல் உப்பு ஆகிய இரண்டுமே அதிக அளவு பயன்களை கொண்டுள்ளன. இவை இரண்டுமே வழக்கமான உப்பை காட்டிலும் குறைந்த அளவு சோடியம் கொண்டுள்ளன. எனவே இந்த இரண்டு உப்புகளையும் நீங்கள் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

BMI கணக்கிடுவது எப்படி?

BMI என்பது உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index). இது ஒரு இயற்பியல் அளவீடு. இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட உயரம் கொண்ட உடலுக்கு எந்த அளவு உடல் எடை சரியானதாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. நிபுணர்களின் படி, 23 -க்கும் குறைவான BMI என்பது சரியான BMI ஆக கருதப்படுகிறது. இதைவிட ஒரு நபர் அதிக BMI கொண்டிருந்தால் அவர் உடல் எடை அதிகம் கொண்டவராக கருதப்படுவார். BMI 25 விட அதிகமாக இருந்தால் அது உடற்பருமனாக கருதப்படும்.

BMI = உடல் எடை (கிலோ கிராமில்) / (உயரம் X உயரம் (மீட்டர்களில்))

எந்த காய்கறி உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்?

பச்சை பட்டாணி, சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் சோளக்கதிர் ஆகியவை ஆரோக்கியமான உணவுகள். எனினும் இவை உடல் எடையை விரைவாக அதிகரிக்க கூடும். இந்த காய்கறிகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இவற்றில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கிடையாது. எனினும், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் சிறந்த மூலங்களாக இவை அமைகின்றன. இதைத்தவிர உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற நீங்கள் கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் போன்றவற்றையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குளிர்ந்த நிலையிலும் உருகக் கூடிய பொருட்கள் என்னென்ன?

இந்த கேள்வியை கேட்டு நீங்கள் நிச்சயமாக குழம்பி போகலாம். ஆனால் சற்று யோசித்தால் இதற்கான பதிலை நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள். இந்த கேள்விக்கான பதில் மெழுகுவர்த்தி. எந்த வானிலையாக இருந்தாலும் சரி, மெழுகுவர்த்தி கட்டாயமாக உருகக் கூடும்.

உடலின் சாதாரண ரத்த சர்க்கரை அளவு என்ன?

ரத்த சர்க்கரை அளவு பொதுவாக நேரத்திற்கு தகுந்தார் போல மாறுபடும். எனினும் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பதற்கான சரியான நேரம் காலை வெறும் வயிறு. இதன் போது உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு 70 முதல் 100 mg வரை இருந்தால் அது சாதாரண அளவாக கருதப்படுகிறது. இதைவிட அதிகமாக இருந்தால் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் எடையை குறைப்பது என்பது கொழுப்பை குறைப்பது ஆகும். நமது உடலில் உள்ள கொழுப்பை எரிப்பது மிகவும் அவசியம். இதற்கு முதலில் நீங்கள் சாப்பிடும் உணவை கட்டுப்படுத்த வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ உங்களுடைய உடலில் உள்ள கொழுப்பு அதிகரிக்க கூடிய உணவுகளை சாப்பிட்டு விடக்கூடாது. துரித உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்து செய்யப்பட்ட தின்பண்டங்கள், காரமான உணவுகள், அதிகப்படியான மதுபானம், அதிகளவு தேநீர் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
மேலும் உங்களுடைய உடல் எந்த அளவிற்கு ஆக்டிவாக இருக்கிறது என்பதை பார்க்க உங்களுடைய உடற்பயிற்சியை அதிகரிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே உடலை வருத்திக்கொண்டு வேலை செய்யக்கூடியவர் என்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்ய தேவையில்லை. இவ்வாறு செய்து வர உங்கள் உடல் எடை விரைவில் குறைவதை நீங்கள் கவனிக்கலாம்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment